திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி என 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கணவர் கவின்குமார் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்க கூடாது என ரிதன்யா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து கவின்தரப்பு பதில் அளிக்க கால அவகாசம் கோரியது.
இந்த ஜாமீன் வழக்கு இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பும் வாதங்களை முன் வைக்க நீதிபதி குணசேகரன் அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து மற்ற வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது. மீண்டும் இன்று இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளது.
திமுகவுக்கு 170 தொகுதிகள்! திருமாவின் உறுதியான முடிவு! போட்டுடைத்த வல்லம் பஷீர்!