திமுக பிரமுகர்களின் மகன் – மகள் திருமணத்தை நடத்தி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறக்க போகும் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்த கழக நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு தமிழ்செல்வி என பெயர் சூட்டினார். மணமக்கள் விட்டு கொடுத்து வாழ வேண்டும். உரிமைகளை விட்டு கொடுக்க கூடாது என மணமக்களுக்கு அறிவுரை.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி தலைவரும் திமுக பேரூர் செயலருமான தேவராஜ் இளைய மகன் திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செங்குட்டுவன் மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ மதிவாணன் மகள் பிரித்திகா ஆகியோர் திருமணம் திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் மேடையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- ஜாதகம் பார்த்து பெண் மாப்பிள்ளை தேடினால் திருமணம் ஆவது தாமதமாகிறது. தேவராஜ் போன்று கழகத்திற்குள் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய துணை முதல்வர்:- மணமக்கள் நண்பர்களை போன்று இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும். நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது என அறிவுரை கூறினார்.
மேலும், திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு பிறக்க போகும் ஆண், பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
மேலும், இன்னும் 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. வீடு வீடாக சென்று தலைவர் அவர்கள் கூறியது போன்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கூறினார். இந்த திருமணத்தில் உற்றார் உறவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமகன் மணமகள் இருவரையும் வாழ்த்தினர்.
ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…