- Advertisement -
நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ல் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டால் ‘நோ வொர்க்- நோ பே’ என்ற அடிப்படையில் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
