அசாமில் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். குடிமக்களின் வாழ்வுரிமையையும் இயற்கை நீதியையும் பாதுகாத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி சார்பாக தண்டையார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்கே நகர் தொகுதி சார்பாக தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் அசாம் மாநில முதல்வரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையினரின் குடியிருப்புகளை அவசர அவசரமாக இடித்து தரை மட்டமாக்கி, அதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடக்கூடிய மக்களை காவல்துறையை ஏவி சுட்டு தள்ளியும், அராஜகம் செய்யும் அசாம் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!
