- Advertisement -
30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.1855 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்ட நீராவி இன்ஜின் அதன் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, 30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், அங்கு காட்சி பொருளாக 90 ஆண்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காட்சி பொருளாக இருந்த நீராவி இன்ஜினை பராமரித்து இயக்கி காட்டுவதாக அப்போதைய ரயில்வே அதிகாரிகள் அந்த நீராவி இன்ஜினை சென்னை லோகோ வொர்க்ஸ் ஷெட்டுக்கு எடுத்து வந்து தொடர்ந்து பராமரித்து இயக்கி வருகின்றனர். அந்த வகையில் சுதந்திரத் தினத்தன்று மக்களின் பார்வைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நீராவி இன்ஜினை பலரும் பார்த்து மகிழ்ந்து செல்பி எடுத்து கொண்டனர்.
