ஜிஎஸ்டி சாலையில் போலீஸ் பூத்துக்குள் கடும் சீற்றத்துடன் இருந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சிக்னலில் போலீஸ் பூத் உள்ளது இதில் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மேஜையின் ரேக் பகுதியில் இருந்த பொருளை எடுக்க முயற்சி செய்த பொழுது உள்ளே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அச்சுறுத்தும் வகையில் படம் எடுத்த ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாபகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வண்டலூர் காப்பு கட்டி பகுதியில் பத்திரமாக விடபட்டது.
மேலும் பெருங்குளத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது இதற்காக வனப்பகுதியில் உள்ள மரம் செடிகள் அகற்றப்பட்டு வருகிறது அங்கிருந்து வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். காட்டுப்பகுதியில் வாழ்ந்த பாம்பு என்பதால் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
மாரி செல்வராஜ் படங்களை மிஸ் பண்ணிட்டேன்…. அனுபமா பரமேஸ்வரன் வருத்தம்!