இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா்.
டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா். NDA கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ஆர் களமிறக்கப்பட்டுள்ளதால், அவருக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில், தமிழகத்தை சேர்ந்த திருச்சி சிவா, மயில்சாமி அண்ணாதுரை களமிறக்கப்படலாம் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இவர், ஆந்திரா உயர்நீதி மன்ற நீதிபதியாகவும் குவஹாத்தி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியில் இருந்தவர் சுதர்சன் ரெட்டி. தற்போது இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சியும் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
15 வருஷம் என் அப்பாவ மிரட்டி… எங்க குடும்பத்தையே கெடுத்தவ சாவித்ரி… ஜெமினி கணேசன் மகள் ஆதங்கம்!
