spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்!  கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும்  உண்மைகள்!

மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்!  கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும்  உண்மைகள்!

-

- Advertisement -

பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நெல்லையில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் மத்திய அரசின் கருப்பு சட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை தமிழ்நாடு அரசியலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஒரு முதிர்ச்சி பெற்ற மக்களாட்சியாக இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக திகழ்வதோடு மட்டுமின்றி, தொடர்ச்சியாக பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியே வைப்பது எப்படி என்பதற்கான எடுத்துக்காட்டாக தமிழகம் விளங்குகிறது. புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் கூட, அமித்ஷா கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்று சொல்லியுள்ளார். அதிமுக சந்தர்ப்ப சூழல்களால், தன்னுடைய அடிமைத்தனத்தால் அவர்கள் மட்டுமே பாஜக உடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலையாகும்.

நெல்லை தச்சங்குறிச்சியில் நடைபெற்ற 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி முகவர்களுக்கான மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சில விஐபிகளை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்கி தங்களுடைய வாக்கு சதவீதத்தை பாஜகவினர் பூதாகரமாக்கி காட்டினார்களே தவிர, அவர்களுக்கான எதார்த்தமான வாக்கு வங்கி என்பது இன்றைக்கும் வளரவில்லை. அப்படி வளர்ந்திருந்தால் கூட அதை எடுத்துக்கொள்வதற்கு புதிய கட்சிகள் களமாட வந்துவிட்டன. இந்த களநிலவரத்தை புரிந்துகொள்ளாமல் அமித்ஷா ஏதோ, திமுகவை வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்.

பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசியவர்களில் அண்ணாமலை மட்டும்தான், கூட்டணி தர்மத்தை மதித்து எடப்பாடி பழனிசாமியை நாம் ஆட்சியில் அமர வைப்போம் என்று பேசியுள்ளார். ஆனால் அமித்ஷா அப்படி பேசவில்லை. அவர் கூட்டணி ஆட்சி என்றுதான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமித்ஷா இரண்டு முறை கூட்டணி ஆட்சி என்று சொல்லி இருந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அதே சீண்டலைதான் நெல்லை கூட்டத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்துள்ளார். பாஜக உடன் கூட்டணி செல்கிற முடிவை எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்தார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. பாஜக அரசு ஒரு கருப்பு சட்டத்தை போட்டு இந்த நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு செல்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் தானும், தனது குடும்பத்தினரும் வரக்கூடாது என்பதற்காக அவர் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துவிட்டார் என்பது தான் பேசுபொருளாக உள்ளது.

திமுக – அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளாக பிரிந்தபோது, அது இந்த மண்ணுக்கு நல்லது என்ற யாரும் பார்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு அப்படி பார்க்கிறார்கள். அதிமுக அழிந்துவிட்டால், ஒரு திராவிட மாற்று கட்சி இல்லாமல் போய்விடும் என்றுதான். அந்த இடத்தைதான் விஜய் எடுக்கப்பார்க்கிறார். அதனால் தான் வாங்க வாத்தியாரே என்று வருகிறார். நான் பாஜகவுக்கு எதிராக இருக்கிறேன் என்று சொல்கிறார். அதிமுகவினுடைய இடத்தை தவெக எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை விஜய்க்கு எங்கிருந்து வருகிறது? எடப்பாடி பழனிசாமியுடைய அடிமைத்தனத்தில் இருந்து தான் விஜய்க்கு இந்த நம்பிக்கை வருகிறது. அதை வைத்துதான் அமித்ஷா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று மூன்றாவது முறையாக சொல்கிறார். இங்கு ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்குவதன் மூலம் அங்கு நாம் இடம்பிடித்து விடலாம் என்று பாஜக கனவு காணுகிறது. அந்த கனவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் 5000 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச்செல்ல பார்க்கிறார்கள். எனவே ஜனநாயகத்தில் முதிர்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். எனவே எத்தனை பூத் கமிட்டி மாநாடுகள் போட்டாலும், பாஜகவுக்கு மிஞ்சப்போவது தோல்விதான்.

அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காததன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் ஜெல் ஆகவில்லை என்பது உறுதியாகிறது. எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது மட்டுமின்றி, அவர் ஒவ்வொரு ஊராக சென்று தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்ள முடியுமா? என்கிற  வாழ்வா? சாவா? பயணத்தில் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருக்கிறார். அப்படி என்றால்? அதற்கு முழு முதற் காரணம் பாஜக அவர்களை கபலிகரம் செய்ய பார்க்கிறது. பாஜகவின் இலக்கு என்பது 2026 அல்ல. 2031.

அதிமுக என்கிற கட்சி இல்லாத வெற்றிடத்தில் தங்களுடைய கட்சியை நிறுவ வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துவிட்டது. அதனால் தனது இருப்பை தக்கவைக்க எதிர்க்கட்சி அந்தஸ்தை 2026லும் காப்பாற்றிக்கொள்வதற்காக தான் மக்களை நேரடியாக சந்திக்க புறப்பட்டுள்ளார். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு இன்னொரு சவால் வந்துள்ளது. தவெக உடனடியாக அதிமுகவுக்கு மாற்றாகி விடும் என்று சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்த கருத்தியல் ஊக்கம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. அது எப்படி வந்துள்ளது என்றால், பாஜக என்பது தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கட்சி என்பதை புரிந்துகொண்டு அதிமுகவின் இடத்தில் மற்றொருவர் சவால் விடுகிறார் என்றால் அதனால்தான் எடப்பாடி தனது வாழ்வா? சாவா? போராட்டத்தில் ஊர் ஊராக மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுட்டிருக்கிறார்.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

2024 மக்களவை தேர்தலில் வாரணாசியில் மோடி வந்தது உள்பட அமித்ஷாவின் தேர்தல் வியூகம் காரணம் அல்ல. வாக்கு திருட்டுதான் காரணம். வாக்கு திருட்டின் மூலமாகவே பிரதமராக மோடி 3வது முறையாக வந்தார் என்பது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அதற்காக பீகாரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேரணி நடத்தி வருகிறார். இந்த பேரணியில் அகிலேஷ் யாதவ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் பங்கெடுக்கும் அளவுக்கு பேசு பொருளாகி இருக்கிறது. எப்போதும் ஒரு சட்டம் இயற்றுகிறபோது அதற்கு ஒரு சமூக காரணம் இருக்க வேண்டும். ஒரு பொது தேவை இருக்க வேண்டும். அல்லது புதிதாக கொண்டுவரும் சட்டத்திற்கு இயற்கை நீதி அடிப்படை இருக்க வேண்டும். அல்லது நீதி பரிபாலன அடிப்படை இருக்க வேண்டும். அப்படி எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஒருவர் சிறைக்கு சென்றால் 31-வது நாள் தாமாகவே பிரதமரும் இல்லை. முதலமைச்சரும் இல்லை என்பது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானதாகும். ஆம் ஆத்மி, திமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்கள் இதை செய்திருக்கிறார்கள்.

மத்திய அரசு சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் ஆதரவில் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்றைக்கு 140 பாஜக எம்.பி-க்கள் மோடியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர்கள் அதிருப்தி அடைகிறபோது, பாஜக ஆட்சி இந்தியாவிலே தொடர வேண்டாம் என்று நினைக்கிறார்கள். எனவே ஆட்சி மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்று அவர்கள் நினைத்தால், அவர்களை மிரட்டும் ஒரு தொனியில் இன்றைக்கு கருப்பு சட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். ஆனால் இது நீதிமன்றத்தில் ஒருநாளும் நிற்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ