spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர்

செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர்

-

- Advertisement -

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நாளை முதல் ஒரு வார காலம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர்

தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

we-r-hiring

அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்வர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 மார்ச்சில் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக,  இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீகளை ஈர்க்க உள்ளார். இதன்படி, நாளை முதல் ஒரு வார காலம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.

செப்டம்பர் 30-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்படும் முதல்வர்  அன்று இரவு 9 மணி அளவில் ஜெர்மனி  சென்றடைகிறார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஜெர்மனியில் ஐரோப்பாவில் மாபெரும் தமிழ் கனவு – 2025  என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன்படி, ஆகஸ்ட் 31, 2025 அன்று பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணி வரை, கோலோன் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழர்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

செப்டம்பர் 1ம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் தமிழக முதலமைச்சர் செப்டம்பர் 2ம் தேதி  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். செப்டம்பர் 3ம் தேதி தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க  உள்ளார்.

செப்டம்பர் 4 ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.  செப்டம்பர் 7ம் தேதி  முதலமைச்சர் மு க ஸ்டாலின் லண்டனில் இருந்து புறப்பட்டு செப்டம்பர்  8ம் அதிகாலை சென்னை வந்தடைகிறார்.

சத்துணவுப் பணியாளர்களுக்கு தோ்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்

MUST READ