(செப்டம்பர் 10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னை: கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2 நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்தது.

இதனால் தங்கம் விலை எப்போது குறையும் என ஆவலுடன் காத்திருந்த நகை பிரியர்களுக்கும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த குடும்பங்களுக்கும் இன்று குஷியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி,1 கிரம் தங்கம் ரூ.10,150-க்கும், 1 சவரன் தங்கம் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சில்லறை வணிகத்தில் வெள்ளி நேற்றைய விலையிலேயே 1 கிராம் ரூ.140 க்கும் , 1 கிலோ ரூ.1,40,000-க்கும் விற்பனையாகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
‘சியான் 64’ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்!