spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்…அன்புமணிக்கு செக்

ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்…அன்புமணிக்கு செக்

-

- Advertisement -

தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதையடுத்து ரமாதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்…அன்புமணிக்கு செக்பா.ம.க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சி பெயர் அல்லது மாம்பழம் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பை கேட்டறியாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் நடந்த பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரது பேரன் முகுந்தனை இளைஞர் அணி பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு, அதே மேடையில் உடனடியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அன்றிலிருந்து, ராமதாஸ்  மற்றும் அன்புமணிக்கிடையே மனக்கசப்பு தொடங்கியது.

we-r-hiring

அதன் பின் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், பாமகவில் குழுக்கள் உருவாகிவிட்டதாக குறிப்பிட்டு அன்புமணியை மறைமுகமாக குற்றம்சாட்டினாா். அதன் பின் செயல் தலைவராக அன்புமணியை அறிவித்தும், தலைவராக நானே இருப்பேன் என்றும், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என அறிவித்தார்.

தந்தை ராமதாஸுக்கு தன் மீதான  கோபம் குறைய , அவரிடம் மன்னிப்பு கேட்க்க தயார் என அன்புமணி தெரிவித்தும், ராமதாஸ் சமரசத்திற்கு தயாராக இல்லை. அதன் காரணமாக, இருதரப்பும் பழைய நிர்வாகிகளை நீக்குதல், புதிய நிர்வாகிகளை நியமித்தல் போன்ற அறிவிப்புகளை மாறி மாறி வெளியிட்டு வருகின்றன.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் கூட்டணி அமைப்பதிலும், கட்சி யாருக்கு சொந்தம் என்பதிலும் குழப்பம் நீடித்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில்,  ராமதாஸ் தரப்பில் பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், அன்புமணி தரப்பில் பாமகவுக்கு உரிமை கோரினால் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் வழங்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பிச்சைக்காரன்’ காம்போ இஸ் பேக்…. டைட்டில் என்னென்னு தெரியுமா?

MUST READ