spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது

சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது

-

- Advertisement -

சென்னை வங்கி மோசடி தொடர்பான வழக்கில் 14 வருடம் தேடப்பட்டு வந்த நபரை சர்வதேச போலீசார் கைது செய்து, தற்போது இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைதுமத்திய புலனாய்வு நிறுவனம் குவைத் நாட்டிலிருந்து தேடப்படும் குற்றவாளி முனாவர் கான் என்பவரை சர்வதேச போலிசார் மூலமாக கைது செய்துள்ளனர்.  மோசடி தொடர்பான வழக்கில்  சி.பி.ஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்த முனாவர் கான், தற்போது இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பாக, சி.பி.ஐ யின் சர்வதேச காவல் ஒத்துழைப்பு பிரிவு, வெளிவிவகார அமைச்சகம்  மற்றும் குவைத் நாட்டின் காவல்துறை இணைந்து மேற்கொண்ட முயற்சியின் மூலம், ரெட் நோட்டீஸ் பெற்ற முநாவர் கான் 11 செப்டம்பர் 2025 அன்று இந்தியா அழைத்து வரப்பட்டார். குவைத் காவல்துறையின் பாதுகாப்புடன் அவர் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் ஹைதராபாத் வந்து சேர்ந்தார். பின்னர், சென்னை சிறப்பு பிரிவு குழுவினர் விமான நிலையத்தில் முநாவர் கானை அழைத்து சென்றனர்.

we-r-hiring

சி.பி.ஐ தொடர்ந்து மேற்கொண்ட கண்காணிப்பின் மூலம் முநாவர் கான் குவைத் நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டு, இண்டர் போல் வழியாக குவைத் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, சி.பி.ஐ சென்னை பதிவு செய்துள்ள 2011 எண் கொண்ட 3.5 கோடி பேங்க் ஆப் பரோடா வங்கி மோசடி வழக்கில், முநாவர் கான் குற்றச் சதி, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்தார். அவர், மற்றவர்களுடன் சேர்ந்து, பாங்க் ஆஃப் பரோடா நிறுவனத்திலிருந்து பண மோசடி செய்ததுடன், சம்பவத்திற்குப் பிறகு குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்றிருந்தார். இதையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், சி.பி.ஐ சென்னை பிரிவு கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு  இண்டர்போல் மூலம் ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. பின்னர், குவைத் அதிகாரிகள் முநாவர் கானை கைது செய்து, இந்தியாவிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இண்டர்போல் வெளியிடும் ரெட் நோட்டீஸ்கள், உலகம் முழுவதும் உள்ள காவல் அமைப்புகளுக்கு பகிரப்பட்டு, தேடப்படும் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க உதவுகின்றன.

இந்தியாவில் இண்டர்போல்க்கான தேசிய மையமாக செயல்படும் சி.பி.ஐ பாரத்போல் வாயிலாக நாட்டின் அனைத்து காவல் அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து, உலகளாவிய உதவியைப் பெற்றுக் கொள்ளிறது. கடந்த சில ஆண்டுகளில், இண்டர்போல் வழியாக ஒருங்கிணைப்பின் மூலம் 130-க்கும் மேற்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் இந்தியாவிற்கு மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி அதிரடி நீக்கம்! உச்சக்கட்ட சண்டையில் பாமக!

MUST READ