spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதலைகீழாக மாறிய விஜயின் கணக்கு! காலியாகும் அதிமுக, சீமான் வாக்குகள்! மீண்டும் திமுக ஆட்சி வரப்...

தலைகீழாக மாறிய விஜயின் கணக்கு! காலியாகும் அதிமுக, சீமான் வாக்குகள்! மீண்டும் திமுக ஆட்சி வரப் போகிறது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

விஜயின் இரண்டாம் கட்ட சுற்றுபயணத்தின் மூலம் தன்னை ஒரு கிரவுடு புல்லர் என்பதை நிரூபித்து விட்டதாகவும், ஆனால் அவருடைய கூட்டத்திற்கு வந்த இளைஞர்களை அரசியல்மயப்படுத்த தவறிவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

விஜயின் நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுபயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது:- நடிகர் விஜயின் இரண்டாம் கட்ட பயணம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. இது திருச்சியை விட சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. திமுக மீதும், திமுக தலைவர்கள் மீதும் விஜய் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாஜக மீது விமர்சனங்களையும் ஓரளவுக்கு முன்வைத்துள்ளார். அதேவேளையில் அதிமுக குறித்து விஜய் எதுவும் சொல்லவில்லை.

we-r-hiring

திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியில் நாம் முழுமையாக பெற வேண்டும் என்று விஜய் கூர்மைப்படுகிறார். விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்து விட்டார் என்று தான் நான் உணர்கிறேன். அவர் ஒரு சினிமா நடிகர் தான். பார்க்க வருபவர்கள் எல்லாம் ரசிகர்கள்தான் என்கிற பார்வையில் பார்க்கக்கூடாது. காரணம் திராவிட இயக்கமே திரை நட்சத்திரங்களால் வளர்ந்ததுதான். எம்ஜிஆர், சிவாஜி திரை நட்சத்திரமாக இருக்கும்போதே நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தனர்.  இந்த பின்னணியில் தான் நீங்கள் அரசியலையும் பார்க்க முடியும். வாக்கு வங்கியையும் பார்க்க முடியும்.

இந்தப் போர் முழக்கம் உங்களை தூங்க விடாது… துரத்திக் கொண்டே வரும் – நாகையில் விஜய் ஆவேசம்

விஜய்க்கு என்ன வாக்கு வங்கி என்று அவர் முடிவு செய்ய வேண்டும் அல்லவா?. வெறும் திமுக எதிர்ப்பு வாக்கு வங்கி மட்டுமா? அப்படி இருக்க முடியாது. 5 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியில் இல்லாவிட்டால் விஜய் எந்த வாக்கு வங்கியை உருவாக்க முடியும். எப்போதும் ஒரு ஆட்சிக்கட்சியை எதிர்ப்போம். அது ஒரு எதிர்ப்பு வாக்கு வங்கி. அதேவேளையில் நமக்கு ஒரு வாக்கு வங்கி வேண்டும். அந்த வாக்கு வங்கி, சித்தாந்த அடிப்படையிலானது ஒரு சிறிய சதவீதம் தான். ஆனால் வெற்றிக்கும், தோல்விக்குமான வித்தியாசம் அந்த சிறிய சதவீதம் தான்.

அடுத்து தலைவருக்கு பின்னால் இருக்கக்கூடிய தளபதிகளின் ஆதரவு. திராவிட இயக்க தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாவட்டத்தில் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருந்தனர். 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று விஜய் சொல்கிறார். அது சரியாக வராது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் உள்ளூர் வாக்காளரை நிறுத்தி தானே ஆக வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் யார் போட்டியிடுகிறார்  என்பது அனைவருக்கும் தெரிந்தாக வேண்டும். விஜய்க்கான மற்றொரு பணி என்பது அவர் வேட்பாளர்களை உருவாக்க வேண்டியதுதான்.

இந்தப் போர் முழக்கம் உங்களை தூங்க விடாது… துரத்திக் கொண்டே வரும் – நாகையில் விஜய் ஆவேசம்

விஜய் நாகைக்கு பிரச்சாரத்திற்கு வருகிறபோது அந்த மேடையில் விஜயுடன் நிற்க வேண்டியவர்கள் பவுன்சர்களா? அல்லது உள்ளூர் வேட்பாளர்களா? அதுதான் நல்லது. அது பெரிய குறையாக தெரிந்தது. இதேபோல் காங்கிரசை எதிர்த்துதான் திமுக அரசியல் செய்தது. ஆனால் அண்ணா உடன் மேடையில் யார் இருப்பார் என்று பார்க்க வேண்டும். அனைவரும் உள்ளுர் தலைவர்கள் தான். அண்ணா தான் கூட்டங்களுக்கு செல்லும் ஊர்களில் உள்ள தலைவர்களின் கடைகளுக்கே சென்று வியாபாரம் செய்வார். தன்னுடைய கட்சிக்காரர் அவருடைய பகுதியில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை செய்வார்.

ஆனால் விஜய் கீழ்மட்டத்திற்கு இறங்கி வந்தால் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்து போய்விடும் என்று நினைக்கிறார். இதுதான் திரை நட்சத்திரங்களின் குறைபாடு ஆகும். விஜயை நான் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த ஒரு நடிகரையும் வெறும் திரை நட்சத்திரம் என்று ஒதுக்கக்கூடாது. விஜய் பிரச்சாரத்திற்கு இளைஞர்களிடம் ஆர்வம் உள்ளது. பெண்கள் வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் அவருக்கு வரத்தான் செய்யும். திமுக எதிர்ப்பு வாங்கி. கவலைப்பட வேண்டியது அதிமுக, சீமான்தான். திமுக கிடையாது. அதுதான் இதில் இருக்கும் சிக்கல்.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
 Tamil Nadu Chief Minister M.K. Stalin 

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திமுகவுக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. நாகை மாவட்டம் இன்றைக்கும் கமியூனிஸ்ட் கட்சி பகுதிதான். இன்றைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தான் நாகை மாவட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வாக்கு வங்கியை விஜய் உடைக்க வேண்டும் என்றால் திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியை கூர்மைப்படுத்தினால், அந்த வாக்கு வங்கி உடையாது. திமுக எதிர்ப்பு வாக்கு வங்கி யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் உடைவார்கள். திமுகவிடம் 40 சதவீதம் வாக்குகள் உள்ளது என்று வைத்துக்கொண்டால், விஜய் திமுகவை விமர்சிப்பதால் அவர்களின் வாக்கு வங்கி எப்படி உடையும்?

கமியூனிஸ்ட்களோ, விசிகவோ உங்களிடம் வந்தால் வாக்கு வங்கி உடையும். ஆனால் அவர்கள் விஜயிடம் வர மாட்டார்கள். அவர்கள் திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறார்கள். கூட்டணி உடைவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை. இதனால் பாதிக்கப்பட போவது அதிமுகவும், சீமானும்தான்.  எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிடம் இருந்த பெண்கள் வாக்கு வங்கியை திமுக கைப்பற்றி உள்ளது. அதில் இளைஞர்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பார்கள். ஆனால் அரசு திட்டங்களால் பயன் பெற்றவர்கள், அந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

தற்போதைக்கு விஜய் கிரவுடு புல்லர் என்பதை நிரூபித்துள்ளார். அதற்கு நட்சத்திர அந்தஸ்து உதவுகிறது. தன்னெழுச்சியாக இளைஞர்களை திரட்ட முடிகிறது என்பதை நிரூபித்துள்ளார். சமீப காலத்தில் பணம் கொடுத்தால்தான் கூட்டம் வரும். அதை விஜய் உடைத்துள்ளார். இளைஞர் சக்தியை திரட்டினால் அவர்கள் சொந்த செலவில் பார்ப்பார்கள் என்று விஜய் காண்பித்துள்ளார். எங்கு கோட்டை விட்டார் என்றால் அப்படி வந்த இளைஞர்களை அரசியல் மயப்படுத்துவதில் விஜய் தவறிவிட்டார்.  அந்த இளைஞர்கள் அரசியல் மயம் ஆக்கப்படவில்லை. நடிகர் என்கிற ஈர்ப்பின் காரணமாக அவர்கள் வருகிறார்கள். பெண்களும் அதேபோல்தான் வருகிறார்கள். அதை விஜய் மேம்படுத்த வேண்டும்.

அத்துடன் அடுத்தக்கட்ட தலைவர்கள் இல்லாமல் இந்த வண்டியை நகர்த்த முடியாது. அப்படி அடுத்தக்கட்ட தலைவர்களை தயார் செய்ய வேண்டும் என்றால் அவர்தான், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். தவெக சார்பில் ராஜ்மோகன் போன்ற நிறைய பேர் பேச வருகிறார்கள். இதேபோல் மாவட்ட அளவிலும் இருப்பார்கள். அவர்கள் தலைவருடைய மேடையை பகிர்ந்துகொள்ள வேண்டும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆளுங்கட்சிக்கு சவாலாக கூட ஒரு கட்சி இருக்க வேண்டும். விஜய் வளர்ச்சியில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக இருக்க இவற்றை எல்லாம் செய்ய வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ