ஒன்பதாவது வாரமாக புதுக்கோட்டை அடுத்த பொம்மாடி மலை அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, கூட்ட நெரிசலை ஏற்படுத்தி மக்கள் மோதி உயிர் போக வேண்டும் என்று எண்ணாத முதலமைச்சர் மக்களை சந்திக்க அஞ்சாத முதலமைச்சர் எந்த நேரத்திலும் மக்களுடன் நிற்கும் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என பாராட்டியுள்ளாா்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த எட்டு வாரங்களாக நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 11641 பேர் பயனடைந்துள்ளனர் அதில் 853 பேருக்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஒன்பதாவது வாரமாக புதுக்கோட்டை அடுத்த பொம்மாடி மலை அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது உடலை பரிசோதனை செய்து கொள்ள குவிந்தனர். ஒவ்வொரு நலம்க்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமிலும் ஆயிரம் முதல் 1400 பேர் விதம் பயனடைந்து வருகின்றனர்.

குறிப்பாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 17 துறை சிறப்பு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அட்டை வழங்குதல், முதலமைச்சரின் காப்பீடு திட்டத்திற்கு பதிவும் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி நலம் காக்கும் ஸ்டாலின் முகாமிற்கு வருகை தரும் மக்களிடம் அவர்களது பெயர் மொபைல் என் பெற்று அவர்களுக்கென்று தனியாக பின் உருவாக்கி க்யூ ஆர் கோடுடன் அவர்களுக்கு சுகாதார அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
மேலும் இந்த முகாமிற்கு வருகை தரும் நபரின் மருத்துவம் சார்ந்த அனைத்து விவரமும் ஹச்.எம்.ஐ.எஸ் 3.0 செயலியில் பதிவு செய்யப்படுவதால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொழுது சுகாதார அடையாள அட்டையை கொண்டு சென்றால் அந்த அட்டையில் உள்ள க்யூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்தாலே அவர்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்னென்ன மாத்திரையை எடுத்துக் கொள்கின்றனர் கடைசியாக அவர்கள் பரிசோதனை செய்து கொண்ட சிகிச்சைகள் என அனைத்தும் வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாமில் ரத்தப் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை கிட்னி பாதிப்புக்கான பரிசோதனை ரத்த அணுக்களின் எண்ணிக்கை என அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு உடனுக்குடன் முடிவுகளும் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இ.சி.ஜி எக்கோ எக்ஸ்ரே ஸ்கேன் கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் என அனைத்தும் ஒரே இடத்தில் செய்யப்படுகிறது. மேலும் மருத்துவத்துறையில் உள்ள 18 பிரிவுகளுக்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு வரும் மக்களுக்கு அனைத்துவித மருத்துவ வசதிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த முகாம் ஒரு தாலுகாவுக்கு மூன்று என்ற விகிதத்தில் நடத்தப்படக்கூடிய இன்று ஒன்பதாவது வாரமாக நலம் காக்கும் ஸ்டாலின் முகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் இந்த முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாமின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்த அமைச்சர் ரகுபதி கூட்ட நெரிசலை ஏற்படுத்தி மக்கள் மோதி உயிர் போக வேண்டும் என்று எண்ணாத முதலமைச்சர் மக்களை சந்திக்க அஞ்சாத முதலமைச்சர் எந்த நேரத்திலும் மக்களுடன் நிற்கும் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறுகையில்: தங்கள் கிராமத்திலேயே பல்வேறு துறை மருத்துவர்களோடு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஏழை எளிய மக்கள் அதிகப்படியான நபர்கள் இதில் பயனடைந்து வரக்கூடிய நிலையில் ரத்தப் பரிசோதனை முதல் ஸ்கேன் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
யாஷின் அடுத்த படம் இது தான்…. ‘கே.ஜி.எஃப் 3’ எப்போது தொடங்கும்?