spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!

விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் விஜய் உள்ளிட்டோர் சேர்ந்து இதுவரை கட்டமைத்த அரசியல் கட்டுமானங்கள், பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்து உண்மை வெளிவரும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்தார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  கரூர் துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் குழு கடிதம் எழுதி இருக்கிறது. விஜய் தங்களுடைய கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று சொல்கிறார். ஆனால் விஜய் சிக்கிக்கொண்ட உடன் எல்லோரும் டீமாக வந்து இறங்குகிறார்கள். ஏன் என்றால் திமுகவை டேமேஜ் செய்வதற்காக இறக்கிவிடப்பட்ட விஜயை சிக்கலில் மாட்ட விடாமல் காப்பாற்றுவது தான் அவர்களுடைய ஒற்றை நோக்கமாகும். போலீசார் வழக்கு தொடர்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அழகாக வழக்கு தொடர்ந்தார்கள். அதனை எடுத்துக்கொண்டு போய் நீதிமன்றத்தில் வைத்தார்கள். இன்றைக்கு நீதிமன்றம் கிழி கிழி என்ற கிழித்துவிட்டது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஸ்டாலின் எப்படி பொறுப்பாவார்?

நாமக்கல்லில் 8.45க்கு பேச வேண்டியவர் 2.45க்குதான் பேசினார். அங்கே 34 பேர் மயங்கி விழுந்துவிட்டார்கள். இதை எல்லாம் நீதிமன்றம் கண்டுகொள்ளாது என்றுதான் விஜய் கட்சியினர் நினைத்தார்கள். சம்பவம் நடந்த உடன் அனைவரும் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பதாக செய்திகள் வெளியாகின்றன.  நான் முதலமைச்சராக இருந்தால் விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு அறிக்கை தரப்படும் என 2 வரிகளில் பதில் அளித்து இருப்பேன். காரணம் சட்டம் – ஒழுங்கு மாநில அரசின் அதிகாரமாகும். அதற்குள் மத்திய அரசு தலையிட முடியாது. இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒரு கட்சி. அதை கேட்காமல் முதலமைச்சரிடம் கேள்வி கேட்கிறார்கள்.

தமிழக அரசின் காவல்துறை, எப்.ஐ.ஆரில் இந்த சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என்று தெளிவாக போட்டுவிட்டார்கள். அதனால் தான் நீதிமன்றம், உங்களுடைய கட்சியின் தலைமைக்கே தலைமைத்துவம் இல்லை என்று கேட்டார்கள். அவர்களையும் வழக்கில் சேர்க்க சொன்னார்கள். பாஜக எம்பிக்கள் குழு வந்ததன் நோக்கம் என்பது விஜயை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். அதற்கு பிறகுதான் விஜய் வீடியோ வெளியிடுகிறார். விஜயை பழிவாங்குவது என்று முதலமைச்சர் நினைத்தால், பத்திரிகையாளர் சந்திப்பின்போது விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருக்க மாட்டார்.

அதற்கு மேலாக எந்த தலைவனும் தன்னுடைய தொண்டன் சாவதை விரும்ப மாட்டான் என்று முதலமைச்சர் விஜய்க்கு, முட்டுக்கொடுத்தார். எந்த ஒரு தலைவனும் விரும்ப மாட்டான்தான். ஆனால் விஜய் அதை வேடிக்கை பார்ப்பார். விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளில் பலர் இறந்தனர். ஆனால் விஜய் வேடிக்கைதான் பார்த்தார். கரூர் மாநாட்டில் இறந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் கொடுத்த விஜய், முந்தைய மாநாடுகளில் இறந்த 8 தொண்டர்களுக்கு என்ன  கொடுத்தார்? தமிழக அரசு ரூ.10 லட்சம் கொடுத்த உடன், வேறு வழியின்றி ரூ.20 லட்சம் விஜய் கொடுத்தார்.

தவெகவினர் நீதிமன்றத்தில் வசமாக மாட்டிக்கொண்டார்கள். நீதிமன்றம் அவர்களை கிழித்துவிட்டது. இதற்கு மேல் அங்கு ஒன்று நிற்காது. எது உண்மை? என்று நீதிமன்றம் கட்டாயம் காட்டிக்கொடுத்துவிட்டது. இதைதான் நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் தமிழக அரசு மிகப்பெரிய அளவுக்கு தயக்கம் காட்டுகிறது. அரசே தயங்கினால் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும். நல்ல வேளையாக நீதிமன்றம் வழக்கை கையில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டது.

வேறு யாராவது இந்த தவறை செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். விஜய் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் விஜய் ரொம்ப திமிறாக பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது 20 சதவீதம் பேர் விஜயின் ரசிகர்கள் மாறிவிட்டார்கள். விஜயை நீ எல்லாம் ஒரு தலைவனா? என்று கேட்கிறார்கள். இங்கிருக்கும் சில பத்திரிகையாளர்கள் தவெக உடன் சேர்ந்துகொண்டு அரசுக்கு எதிராக குற்றச் சாட்டுகளை முன்வைத்தனர். அதனால் அரசும், காவல்துறையும் தயங்கியது. தற்போது நீதிமன்றம் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்துவிட்டது. இனி விஜய் கைது உள்பட என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

கரூர் கூட்டநெரிசல் மரண விவகாரத்தில் விஜய் தான் முதல் குற்றவாளி. மக்களை கொள்கிற உரிமை விஜயிடம் உள்ளதா? விஜயை கைது செய்வதற்கு முழுமையான முகாந்திரம் இருக்கிறது. சட்டம் அதற்கு இடம் தருகிறது. விஜயை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என அனைவரையும் கைது செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த முடியும். தவெக என்பது ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட கட்சி கிடையாது. விஜய் சொன்னால் மட்டுமே கேட்பார்கள். ஆனால் விஜய் சொல்ல மாட்டார்.

தற்போது வந்திருக்கும் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு, காவல்துறை தங்களுடைய பணியை சரியாக செய்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து கருர் துயரம் குறித்து இதுவரை கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்டுமானங்கள், இவர்கள் பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு உண்மை வெளியில் வரும். நாட்டு மக்கள் உணர்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ