spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவின் ரகசிய சர்வே! எடப்பாடிக்கு போன் போட்ட அமித்ஷா! ப்ரியன் நேர்காணல்!

திமுகவின் ரகசிய சர்வே! எடப்பாடிக்கு போன் போட்ட அமித்ஷா! ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் எடுக்கப்போகும் முடிவு பல மாற்றங்களை பல கட்சிகளில் உண்டாக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் செல்வாக்கு குறித்து திமுக நடத்திய ரகசிய சர்வே குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- தி பிரிண்ட் இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையில் விஜய் குறித்து திமுக எடுத்த ரகசிய சர்வேயின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தவெக, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தாலும் கூட திமுக 50 சதவீதம் வாக்குகள் வரை வாங்கும் என்று சர்வேயில் சொல்கிறார்கள். அதிமு, தவெக, பாஜக கூட்டணி 35 சதவீதம் வாக்குகளை பெறுகிறார்கள். தவெக தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வரை வாக்குகளை வாங்கி இருக்கிறது.

கரூர் சம்பவத்திற்கு பிறகும் விஜய்க்கான செல்வாக்கு குறைய வில்லை என்றும் வெளியாகி உள்ளன. அதற்கு காரணம் விஜயின் ரசிகர்கள் ஓட்டு அவரிடம் உறுதியாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் கூட விஜயை ஆதரித்து தான் பேசுகிறார்கள். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு அவருக்கு நடுநிலையாளர்கள் வாக்குகள் குறைந்துவிடும். விஜய், என்டிஏ கூட்டணிக்கு சென்றால் அவருக்கு பாதிப்பு தான். விஜயகாந்த் இரு முறை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பின்னர், தான் கூட்டணிக்கு சென்றார். ஆனால் முதல் தேர்தலிலேயே விஜய் கூட்டணிக்கு சென்றால் அவர் மீதான மதிப்பு குறைந்துவிடும்.

திமுக - அண்ணா அறிவாலயம்

அதிமுக – பாஜக கூட்டணி தனித்து போட்டியிட்டால் தங்களால் வெற்றி பெற முடியாது என்று நினைக்கிறார்கள். எனவே சிபிஐ விசாரணை வைத்துக்கொண்டு விஐயை கூட்டணிக்கு இழுக்க முடியுமா? என்று அவர்கள் முயற்சி செய்வார்கள். என்டிஏ கூட்டணி அமைந்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக அணி, திமுக தலைமையில் பாஜக எதிர்ப்பு அணி அமைந்துவிடும். அப்போது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இருக்கும் எதிர்ப்பு உணர்வு மக்கள் மத்தியில் பேசப்படும்போது அதை பாஜக அணியாகத்தான் செட் செய்வார்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கருத்து வேறுபாட்டை மறந்து ஒற்றுமையாக பாஜகவை வீழ்த்த முயற்சிப்பார்கள்.

விஜய்க்கு என்ன பிரச்சினை என்றால்? எடுத்த உடன் 14-15 சதவீதம் வாக்குகள் பாஜக அணிக்கு கிடைக்காது. அது கடந்த தேர்தல்களை போல திமுக கூட்டணிக்கு சென்றுவிடும். அதற்கு மேலாக திமுகவின் சொந்த வாக்கு வங்கி மற்றும் கூட்டணிக்கட்சிகளின் வாக்குகள் என 20 -25 சதவீதம் வாக்குகளை வாங்கும். அப்போது இயல்பாகவே 40 சதவீதம் வாக்குகள் வந்துவிடும். திமுகவின் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் யாரும் வாக்களித்தார்கள் என்றால் 5 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

என்னை பொருத்தவரை அதிமுக, பாஜக, விஜய் கூட்டணி அமைகிறபோது, திமுக கூட்டணிக்கு குறைந்தபட்சம் 45 சதவீதம் வாக்குகள் வரும். 50 சதவீதம் வாக்குகள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். என்டிஏ கூட்டணி 35- 39 சதவீதம் வாக்குகள் வரை வாங்கக்கூடும். இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் 6-7 சதவீதம் வாக்கு வித்தியாசம் இருக்கும். அதற்கு காரணம் விஜயின் தனிப்பட்ட செல்வாக்கு, அதிமுக  வாக்கு வங்கியாகும். பாஜகவுக்கும் 8 சதவீதம் வாக்குகள் உள்ளன. தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு காரணமாக தான் திமுக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

சமீப காலமாக கிறிஸ்தவர்கள் விஜயின் பின்னால் செல்லலாமா? என்கிற மனநிலையில் உள்ளனர். விஜய் என்டிஏ கூட்டணிக்கு செல்கிறபோது, அவர்கள் எல்லாம் மீண்டும் திமுகவின் பக்கம் வந்துவிடுவார்கள். எனவே பாஜகவின் பின்னால் சென்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விஜய் யோசித்து பார்க்க வேண்டும். விஜய் தனித்து நின்றால், திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளை அவர் பிரிப்பார் என்று பாஜகவினர் நம்புகிறார்கள். ஆனால், அதிமுக – பாஜகவுக்கு செல்கிற திமுக எதிர்ப்பு வாக்குகளையும் பிரிப்பார்.

திமுக அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது போன்று, ஆதரவு மனப்பான்மையும் உள்ளது. திமுக அரசின் நிர்வாகம் நன்றாக இருக்கிறது. கரூர் சம்பவம், கள்ளக்குறிச்சி மரணம், அண்ணா பல்கலை. விவகாரம், அமைச்சர்களின் கருத்து, அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை அரசுக்கு எதிரானவையாக உள்ளன. திமுக அரசின் திட்டங்களால் கோடிக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ள நிலையில், அதில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வாக்களித்தாலே திமுகவுக்கு போதும்.

திமுக அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருக்கிறபோதும், முதல்வர் ஸ்டாலின் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று இருக்கும் ஸ்டாலினுக்கு நிகராக தமிழ்நாட்டில் வேறு எந்த தலைவரும் கிடையாது. கூட்டணி கட்சிகள் பலமாக உள்ளது. கமல்ஹாசன் போன்ற பிரச்சார வலிமை மிக்க தலைவர்கள் இருக்கிறபோது திமுக அணியால் 50 சதவீதம் வாக்குகளை தொட முடியும் என்று நினைக்கிறேன்.

2021 தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி இடையே வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது அதிமுக பலவீனமாக இருக்கிறது. அதிமுக, பாஜக, தவெக இணைகிறபோது தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்கள் அதில் இடம்பெற மாட்டார்கள். அப்போது அதிமுகவின் வாக்குகள் பிரிவதால் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். திமுவுக்கு அதன் சொந்த வாக்குகள், கூட்டணி கட்சிகளின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் நலத்திட்டங்களுக்காக கிடைக்கும் வாக்குகள் உள்ளன. அதிமுக, பாஜக உடன் இருப்பதால் 13 சதவீதம் சிறுபான்மை வாக்குகளை இழந்துவிடுகிறார்கள்.

விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் இருப்பதாக கருத்துக்கணிப்பில் சொல்லியிருப்பது மிகைப்படுத்தப்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு செல்வாக்கு இருப்பது உண்மையாகும். விஜய் அன்டெஸ்டட் என்கிறபோது அவருடைய வாக்குகள் குறைவாகவும் இருக்கலாம், கூடுதலாகவும் இருக்கலாம். இந்த விரக்தியின் காரணமாக தான் அதிமுக தரப்பில் விஜயிடம் கூட்டணிக்கு கெஞ்சுகிறார்கள். எப்படியாவது விஜயை கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் எனறு கரூர் விஷயத்தில் தவெகவுக்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக் கொடுக்கிறார்.

அதிமுக தனியாக எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்தபோதும் சிறுபான்மை வாக்குகளை பெற முடியவில்லை. ஆனால் தவெக உடன் அதிமுக கூட்டணி அமைத்தால், சிறுபான்மை வாக்குகளை பாதி அளவுக்கு பெற்றுவிடும். எனவே எடப்பாடி எப்படியாவது தவெகவை இழுத்து போட்டு வேண்டும் என்று நினைக்கிறார். தற்போது பாஜகவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா, எடப்பாடிக்கு போனில் பேசியுள்ளார். அப்போது, நீங்கள் தவெக கூட்டணிக்கு செல்ல எங்களை கட் செய்ய போகிறீர்களா? உங்களுக்கு இந்த மாதமே கால அவகாசம் தருகிறோம். எதுவாக இருந்தாலும் சொல்லிவிடுங்கள் என்று அமித்ஷா சொன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது எடப்பாடி, பாஜக கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம். நமது கூட்டணிக்கு தவெகவை அழைத்துவர பேசிக் கொண்டிருப்பதாக சொல்லியுள்ளார்.

விஜய் அதிமுக உடன் செல்ல தயாராக உள்ளார். ஆனால் பாஜக உடன் கூட்டணி செல்வதற்கு தயாராக வில்லை. அதேவேளையில் ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் எப்படியாவது விஜயை தவெக கூட்டணிக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். இந்த தேர்தலை பொறுத்தவரை விஜய், எடுக்கிற முடிவு பல மாற்றங்களை பல கட்சிகளில் உண்டாக்கும். அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ