- Advertisement -
சபேஷின் மறைவு தேவா சார் குடும்பத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பேரிழப்பு என இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளாா்.
மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் அஞ்சலி செலுத்திய, பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்து மறைந்தாலும் ஒரு சில பேருடன் தான் தனிப்பட்ட உறவு இருக்கும். சபேஷ் முரளி என்ற காம்போவில் சபேஷின் மறைவு தேவா சார் குடும்பத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசை சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பு என்றார்.
மேலும் இசைத்துறையில் எவ்வளவோ விஷயங்களை அவர் சாதித்ததாகவும் அவரது பிரிவு என்பது தேவா சார் குடும்பத்திற்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தான் என்று இசையமைப்பாளா் டி.இமான் கூறினார்.



