spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎல்.ஐ.சி பணத்தை ஏப்பம் விட்ட அதானி! மாட்டிக்கொண்டு முழிக்கும் மோடி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!

எல்.ஐ.சி பணத்தை ஏப்பம் விட்ட அதானி! மாட்டிக்கொண்டு முழிக்கும் மோடி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

அதானி நிறுவன கடனுக்கான வட்டியை செலுத்த, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் 30 ஆயிரம் கோடி பணம் முதலீடு செய்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் செய்தி மூலம் அம்பலமாகி உள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதானி நிறுவனத்தை காப்பாற்ற, எல்.ஐ.சி ரூ.33,000 கோடியை முதலீடு செய்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இதன் பின்னணி குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- மத்திய அரசு ரூ.33,000 கோடி மதிப்புள்ள எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகளை அதானி குழுமத்தில் கடந்த மே மாதம் முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய நிதி சேவைகள் துறை வரைவு செய்ய,  நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பெரிய நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் அதானி நிறுவன விவகாரத்தில் எல்.ஐ.சி நிறுவனம் நிதி பத்திரங்களை வாங்கியுள்ளது. அரசு பத்திரங்களில் 7.2 சதவீதம் லாபம் மட்டுமே கிடைக்கிறது. அதேநேரத்தில் அதானி பத்திரங்களில் 7.8 சதவீதம் லாபம் கிடைப்பதாக நிதி ஆயோக், நிதி சேவைகள் துறை போன்ற அமைப்புகள் விளக்கம் அளித்துள்ளன.

அதேநேரத்தில் அரசு பத்திரங்களில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டாலும், அந்த நிதி முழுமையாக திருப்பி அளிக்கப்படும். அதேவேளையில் அதானி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டால், அந்த பணம் திரும்பி வராது. வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் 7.8 சதவீதம் லாபம் கிடைக்குமா? என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த ரூ.33,000 கோடி வாங்கியது எதற்காக என்றால், அதானி வாங்கிய ரூ.2 லட்சம் கோடி கடனுக்கான வட்டித்தொகை ரூ.16,000 கோடியை செலுத்துவதற்காக தான். அதானி நிறுவனத்தின் பங்குகள் நல்ல விலைக்கு விற்பனையாகும் நிலையில், அதில் சில பங்குகளை விற்றாலே அந்த தொகையை செலுத்தி விடலாம். ஆனால் தன்னுடைய பங்குகளை இழக்காமல் வட்டி கட்டுவதற்காக எல்.ஐ.சி பணத்தை பெற்றுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் க்ரானி கேப்பிடலிசம் என்கிற வார்த்தையை சில பொருளாதார நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள். க்ரானி கேப்பிடலிசம் என்பது தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கடனுதவிகளை வழங்குவதாகும். மத்திய அரசு தற்போது அதை தான் செய்து கொண்டிருக்கிறது. அதானிக்கு மட்டும் கடன்களை வழங்குகிறார்கள். அதானி நிறுவனம், ஒரு துறைமுகத்தை வாங்கி தொழில் செய்கிறார்கள் என்றால் அதற்கு எல்.ஐ.சி கடன் வழங்கலாம். ஆனால் இங்கே அதானி வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட பணம் இல்லாததால், மீண்டும் எல்ஐசியிடம் கடன் வாங்கியுள்ளனர். அனில் அம்பானியின் நிறுவனமும் இதேபோல் தான் கடன் வாங்கியது. தற்போது அந்த நிறுவனம் என்ன நிலையில் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அதானியின் புத்திசாலித்தனம் என்பது எந்த தொழில் எல்லாம் நிச்சயமாக லாபம் தருமோ, அப்படிப்பட்ட தொழில்துறைகளை எல்லாம் மற்றவர்களுக்கு கிடைக்காமல் வாங்கி விடுவார். விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், சுரங்கங்கள் போன்றவை இதில் அடங்கும். ஆனால் அதானி நிறுவனத்திற்கு 20 சதவீதம் கடன்கள் இருப்பதாகவும், இது சற்று அச்சுறுத்துவதாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

விரைவில் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் - ஹிண்டன்பர்க்

அதானி நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அதானி நிறுவனம், ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்து, நாட்டில் உள்ள மாநில மின்சார வாரியங்களுக்கு விற்பனை செய்தனர். அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. ஹிண்டன்பர்க், அதானி நிறுவனம் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை சரியான பதில் அளிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அது யாருடைய பணம்? எங்கிருந்தது வந்தது? என்று கேள்வி எழுப்பியது. ஆனால் செபி அந்த கேள்வியை புறம் தள்ளிவிட்டது. அமெரிக்காவில் முதலீடுகளை பெற லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றால்? அமெரிக்காவில் முதலீடுகளை திரட்ட அதானிக்கு தடை விதித்தால், அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்க கூடும். அப்படி நடைபெற்றால் எல்ஐசியின் நிலை என்னவாகும்?

2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டபோது, அவர் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய விமானம் அதானியுடையது. இந்துத்துவா கொள்கையை பயன்படுத்தி ஆட்சியை பிடித்த மோடி, அடுத்தபடியாக ஆட்சியை கலைக்கும் வல்லமை பெற்றவர்களான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஜனநாயகத்தின் தூண்களாக கருதப்படும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட நிறுவனங்களை எல்லாம், பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர் என்றே நினைக்கிறேன். தன்னுடைய ஆட்சியை நிரந்தரமாக தக்க வைப்பதற்காக எந்த விதமான வழிமுறைகளை எல்லாம் கையாளலாம் என்று நினைக்கிறார். அதில் ஒன்றுதான் அதானியை மட்டுமே வளர்த்துவிடுவது.

மோடி மீது குஜராத்திகளை மட்டுமே வளர்த்துவிடுகிறார் என்கிற குற்றச்சாட்டு சொந்த கட்சியினர் இடையே உள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-க்கு தங்களுடைய அஜெண்டாவான சிஏஏ, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், ராமர் கோவில், வேளாண் சட்டங்கள் போன்றவற்றை மோடி நிறைவேற்றினால் போதும் என நினைக்கிறார்கள். அதை மோடியும் அதை தைரியமாக நிறைவேற்றி கொடுக்கிறார். வாஜ்பாயாக இருந்தால் பயந்துகொண்டு செய்திருக்க மாட்டார். மத்தியில் ஆட்சி மாறும் வரை அதானிக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதானி நிறுவனத்திற்கு பெரிய பிரச்சினை ஏற்படும். அப்படி ஏற்பட்டால் எல்.ஐ.சியின் முதலீட்டு பணம் பாதிப்பிற்கு உள்ளாகும் அச்சமும் இருக்கிறது. அப்படி ஏற்பட்டால் அதில் முதலீடு செய்திருக்கும் அப்பாவி ஏழை மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ