spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது - துணை...

மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது – துணை முதல்வர்

-

- Advertisement -

வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வடசென்னை கால்வாய்களில் எந்த அளவு பணி நிறைவடைந்துள்ளது என்பதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.பருவமழை பாதிப்புகளை துணை முதல்வர் ஆய்வு…சென்னை வியாசர்பாடி கால்வாய் கேப்டன் காட்டன் கால்வாய் கொடுங்கையூர் கால்வாய் மணலி இணைப்பு கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை வியாசர்பாடி கால்வாய்  350 மீட்டருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 320 மீட்டர் பணி நிறைவடைந்துள்ளது. இதன் மதிப்பு 3.44 கோடி ஆகும். அதேபோல் வியாசர்பாடி டான் பாஸ்கோ பள்ளி அருகே செல்லும் கேப்டன் காட்டன் கால்வாய் 3040 மீட்டருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 1150 மீட்டர் பணி நிறைவடைந்துள்ளது இதன் மதிப்பு 5.09 கோடி ஆகும்.

கொடுங்கையூர் கால்வாய் 2595 மீட்டர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 760 மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளது. 3.09 கோடி மதிப்பீடு ஆகும். மணலி மண்டலம் இணைப்பு கால்வாயில் 530 மீட்டருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 350 மீட்டர் பணிநிறைவடைந்துள்ளது. இக்கால்வாயின் மதிப்பு 69 லட்சம் ஆகும். வடகிழக்கு பருவமழை காரணமாக நடைபெற்று வரும்     கால்வாய் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கேட்டாா்.

we-r-hiring

மேலும் இந்த பணிகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் எனவும் ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாாிகள் பதிலளித்தனா். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கண்ட ஆய்வின்போது அமைச்சர் கே என் நேரு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். அதன் பின்னா் துணை முதல்வா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் அவர்கள்  ஆய்வு மேற்கொள்ள கூறியிருந்தார். அமைச்சர் கே என் நேரு, மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டேன். வடசென்னையில் 18 கால்வாய்கள் 13 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலமாக   தூர்வாரப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 331  கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் தன் கழிவுகள் சுத்தம் செய்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வைக்கின்ற புகார்கள் அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  அந்த வகையில் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி கால்வாய், கேப்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆய்வு செய்தோம் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அடுத்த பத்து நாட்களுக்கு பெரிய மழை  இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்த அளவிற்கு மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது.

எல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”

MUST READ