உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பெயரை மத்திய சட்டத்துறை அமைச்சத்திற்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் காவாய்.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ம் தேதி பி.ஆர் கவாய் பதவியேற்றார். பி.ஆர் கவாயின் பதவி காலம் நவம்பர் 23ம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் மரபின்படி பணியில் உள்ள தலைமை நீதிபதி அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
அதன்படி இன்று உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் காவாய் உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் தற்போதைய மூத்த நீதிபதி சூர்யகாந்த் பெயரை மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளார். உச்சநீதி மன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த நீதிபதி சூர்யகாந்த் 2019 மே 24ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

இவரின் பதவிக்காலம் 2027 பிப்ரவரி 9ம் தேதி வரை உள்ளதால் உச்சநீதிமன்றத்தில் மிக நீண்ட காலம் பணியாற்றிய நீதிபதிகளில் ஒருவராக நீதிபதி சூர்யகாந்த் பெருமையை பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மத்திய சட்டத்துறை அமைச்சகம் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜோசப் விஜய் பாஜக உடன் சேர்வாரா? முதல்வர் பதவி – அமித்ஷா கணக்கு? அய்யநாதன் நேர்காணல்!


