தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் இன்று வரை இயல்பை விட 53% கூடுதலாக மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானில ஆய்வு மையம் தெரிவித்த தகவலின்படி, ”வழக்கமான நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சராசரியாக 151.1 மிமீ மழை பொழியும். ஆனால், இந்த ஆண்டில் இதுவரை 230.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 53% அதிகம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மாவட்டத்திலும் பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பெய்துள்ளது. வழக்கமான நிலையில் சென்னையில் 234.3 மில்லி மீட்டர் மழை பொழியும். இந்நிலையில், தற்போது வரை 345.4 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இது இயல்பை விட 47% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்


