spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!

காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!

-

- Advertisement -
காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!
காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படை போலீஸார் குழு கேரளா விரைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள போரிவலி என்னுமிடத்தைச் சேந்தவர் ஜாடின். கொரியர் நிறுவனம் ஒன்றே நடத்தி வரும் இவர், கமிஷன் அடிப்படையில் பணம் மற்றும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கும் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹுண்டாய் க்ரெட்டா காரில் 4.5 கோடி ரூபாய் பணத்தை தங்கள் நிறுவனத்தின் ஓட்டுனர் இருவர் தலைமையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை சவுகார்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கார் காஞ்சிபுரம் ஆட்டுப்புதூர் பகுதி அருகே வந்தபோது 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் ஓட்டுநர்களை தாக்கி விட்டு, 4.5 கோடி ரூபாய் பணத்துடன் காரையும் கடத்திச் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆற்காடு சென்ற கொள்ளயர்கள், பணத்தை எடுத்துக் கொண்டு காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மும்பையில் இருந்து உரிமையாளர் ஜாடின் அளித்த தகவலின் அடிப்படையில், பொன்னேரிகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

எஸ்.பி.சண்முகம் தலைமையிலான போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கேரள மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்று அங்கு வழிப்பறியில் ஈடுபட்ட கொல்லம் , திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுஜிலால், சந்தோஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் மேலும் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க ஆய்வாளர்கள் தலைமையில் இரண்டு தனிப்படை குழுக்கள் கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

MUST READ