spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!

தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது கண்டிக்கத் தக்கது என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- பிரதமர் மோடி மீண்டும் ஒரு முறை தமிழர்களை கொச்சைப்படுத்தி, தமிழர்களை கொடூரர்களாக சித்தரித்து பேசியுள்ளார்.  எப்போது எல்லாம் பிற மாநிலத்தில் தேர்தல் வருகிறதோ, அப்போது எல்லாம் மற்ற மாநிலங்களை அவமதித்து பேசுவார். குறிப்பாக தமிழர்களை, தென்னிந்தியர்களை அவமதிப்பு செய்வது பிரதமர் மோடிக்கு பிடித்தமான விஷயமாக உள்ளது. இந்தியாவின் பிரதமர் மோடி இப்படி பேசுவது புதிதானது அல்ல. உத்தரபிரதேசத்தில் சென்று உங்களை தமிழ்நாட்டில் அடிக்கிறார்கள். இழிவாக பேசுகிறார்கள் என்று சொன்னவர்தான் மோடி. தற்போது பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது. தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஷமத்தன்மையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். ஒடிசாவில் போய் பூரி ஜெகநாதர் ஆலயத்தின் சாவியை தமிழ்நாட்டுக்காரர் திருடிவிட்டு போய்விட்டதாக பேசினார் மோடி. அதேவேளையில் தமிழ்நாட்டிற்கு வந்தால், சோழர்களின் பெருமைகளை, தமிழின் பெருமைகளை பேசுவார். ஆனால் இவற்றை எல்லாம் எவ்வளவு நயவஞ்சகமாக பேசியுள்ளார் என்பது, அவருடைய பீகார் பிரச்சாரம் வெளிப்படுத்தி உள்ளது.

கேரளா வளா்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமா் மோடி பேச்சு

பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி, தமிழக அரசியல், தமிழர் வழிபாட்டு முறை, தமிழர் பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம். இல்லாவிட்டால் தமிழ் தேசிய இனத்தையே திருடன் என்று சொல்வார்களா? பூரி ஜெகநாதர் கோவில் சாவியை தமிழர்கள் திருடிவிட்டதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பீகாரிகளை கட்டிவைத்து அடிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இங்கு பானிபூரி விற்பவர்களை கேட்டுபாருங்கள். யார் அடிக்கிறார்கள் என்று சொல்வார்கள். வடமாநிலத்தவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி வரும் மக்கள் தமிழர்கள். ஆனால் மோடியும், அமித்ஷாவும் தங்களுடைய அரசியல் சுயலாபத்திற்காக தொடர்ந்து தமிழர்களை இழிவுபடுத்துகிறார்கள். இந்தி வாரம் கொண்டாடுவது. இந்தி தான் அலுவல் மொழி என்று திருப்பி திருப்பி சொல்வது. சமஸ்கிருத வளர்ச்சிக்கு அதிகளவு நிதி செலவிடுவது போன்ற செயல்களை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்தால் திருக்குறளை தப்பு தப்பாக சொல்வது. எவ்வளவு பொய் பேசுகிறார்கள் பாருங்கள்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள வடஇந்திய தொழிலாளர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் போகிறார்கள். எஸ்.ஐ.ஆர். என்பது இதுதான். வடஇந்தியர்களை நாம் தொழிலாளர்களாக பார்க்கிறோம். ஆனால் பாஜக அவர்களை ஒரு ஆயுதமாக பார்க்கிறது. அதற்கான வேலைகளிலும் அவர்கள் ஈடுபட தொடங்கிவிட்டனர். வடஇந்திய வாக்காளர்களை தமிழகத்தில் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார். நமது மொழி கடவுள் கருவறையில் இருக்கக்கூடாது என்று சொல்பவர்கள். நமது மொழியை விட சமஸ்கிருதம் தான் புனிதமானது என்று சொல்பவர்கள். மூத்த மொழியான தமிழைவிட இந்தி படியுங்கள் என்று சொல்பவர்கள் இன்றைக்கு தமிழர்களின் பண்பு நலன்களை அவமானப்படுத்தி உள்ளனர். தமிழர்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்றும், அப்பாவி பீகாரிகளை அடிப்பார்கள் என்று ஓட்டுக்காக பிரதமர் மோடியே இப்படி சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

பொதுமக்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இங்கு பிழைக்க வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் அடி வாங்கி கொண்டிருக்கிறார்களா? கொலை செய்யப்படுகிறார்களா? இதில் எதாவது ஒன்று நடைபெற்றுள்ளதா? வடஇந்தியர்கள் மட்டும் அல்ல. முல்லைப் பெரியாறு பிரச்சினையின்போது மலையாளிகளை பாதுகாத்தது தமிழர்கள் தான். காவிரி பிரச்சினையின்போது இங்குள்ள கன்னடர்களின் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ஒடிசாவில் சென்று தமிழர்களுக்கு எதிராக தூண்டி விடுவார்கள். ஆனால் இங்கே ஒடிசாக்காரர்கள் நலமுடன் தான் இருப்பார்கள். மற்ற மாநிலத்தவர்களை விட தமிழர்கள் என்றைக்கும் பெருந்தன்மையும் சகிப்புத்தன்மையும் உடையவர்கள்.

தங்களுடைய தனித்தன்மைக்காக போராடுவார்களே தவிர, ஒருபோதும் பிற மொழியினரை, மாநிலத்தவரை அடிக்க வேண்டும். விரட்ட வேண்டும் என்ற அரசியல் இங்கே ஒருபோதும் நடந்தது கிடையாது. ஏனென்றால் இது மொழி அரசியல் பக்குவப்படுத்தப்பட்ட மண். வடஇந்திய வாக்காளர்களை சேர்க்கக்கூடிய பணிகளை சத்தம் இல்லாமல் செய்து கொண்டே, மறுபுறம் இங்கே வடஇந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று போலித்தனத்தை பாஜக பிரச்சாரம் செய்கிறது. அதன் சூழ்ச்சியை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ