spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!

உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!

-

- Advertisement -

குமரன் தாஸ் 

திராவிட இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் அதற்கு இணையாக இந்தியாவில் தோன்றிய வேறு எந்த இயக்கத்தையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!நூற்றாண்டைக் கடந்து இன்றும் அதே இளமைத் துடிப்போடும் ஆற்றலோடும் இயங்கும் இயக்கம் அது. ஆம்! எந்தவொரு இயக்கமும் அதன் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என்று பல பருவங்களைக் காண்பதுண்டு. அது இயற்கையானது தான்.

ஆனால் திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்து குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிபப் பருவத்தை அடைந்த பிறகு, அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடைந்ததே தவிர ஆற்றலிலும் இயங்குதலிலும் என்றும் இளமைப் பருவத்தின் அதே வேகத்துடனே தொடர்ந்து செயலாற்றுவதை நாம் காண்கிறோம். அதற்குக் காரணம் காலம் தன்முன் கொண்டுவந்து நிறுத்தும் புதிய புதிய எதிரிகளையும் முரண்களையும் எதிர்த்துப் போராடிச் சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம் எனும் தனது இலக்கை நோக்கிப் பயணிக்கிறது என்பது தான். மேலும் திராவிட இயக்கம் (திமுக) இப்போராட்டத்தைத் தலைமையேற்று நடத்துவதற்குத் தகுதியான புதிய இளம் சாமுராயையும் தேடிக் கண்டடைந்து கொள்வதுதான்.

we-r-hiring

திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியில் இருந்த முதுபெரும் மூத்த தலைவர்கள் பலர் பார்ப்பனரல்லாத மக்களுக்காகக குரல் கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார், நமக்கான தத்துவத்தை உருவாக்கித் தந்தார். அத்தத்துவத்தை நிறைவேற்றும் போர் வீரர்களாக இளைஞர்கள் பலர் திரண்டு வந்தனர். அவர்களை வழிநடத்தும், அறிவும் ஆற்றலும் கொண்ட தளபதியாக அன்று அறிஞர் அண்ணா அமைந்து வழி நடத்தினார்.

பெரியார் படைத்துத் தந்த தத்துவத்தை பரவலாக்கம் செய்ய, எழுத்து, கலை, இலக்கியம், நாடகம், சினிமா, பேச்சு, போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் அவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். எதிரிகளுடன் தத்துவப் போர் புரிந்தனர். பிறகு ஏழை எளிய மக்களைத் திரட்டி அவர்களின் கையில் ஆட்சி அதிகாரம் கிடைக்க அரசியல் கட்சியைத் தொடங்கினர். பல்வேறு போராட்டங்களை நடத்தி, மக்களின் செல்வாக்கைப் பெற்று அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றினர்.உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!அப்போது முதல்,களமும் யுத்தமும் மாறியது. பேச்சுடன் செயலுக்கும், தத்துவத்துடன் நடைமுறைக்கும் வேலை வந்தது. பெரியாரின் சமத்துவக் கொள்கையைச் சட்டமாக்க, நடைமுறைப்படுத்த உள்ளும் புறமும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. திடீரென அண்ணா மறைந்தபோது கொள்கையைப் பேசுவதிலும் எழுதுவதிலும் (கலை இலக்கியத்தில்) மட்டும் அண்ணாவைப் போலில்லாமல், கொள்கையை நடைமுறைப்படுத்துவதிலும் அண்ணாவைப் போலவே யாருக்கும் அஞ்சாத துணிச்சல்காரரான கலைஞர் பொறுப்புக்கு வந்தார் அண்ணாவின்  பணியைத் தொடர்ந்தார். சாதனைகள் பல படைத்தார்.

எதிரிகள் ஓய்ந்துவிடவில்லை. துரோகிகளை உருவாக்கினர். அப்போது எதிரிகளுடன் துரோகிகளையும் எதிர்த்துப் போரிடவேண்டிய இக்கட்டான நிலைக்கு கலைஞர் தள்ளப்பட்டார். கடுமையாகப் போராடி, கழகத்தைக் காப்பாற்றியதுடன் தமிழ்நாட்டையும் மக்களையும் துரோகிகளிடமிருந்து மீட்டுக் காப்பாற்றினார்.

புதிய பல திட்டங்களைத் தீட்டி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். காலத் திற்கு ஏற்ப புதிய தொழில்துறைத் திட்டங்களைத் தீட்டி நவீனத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பினார். நவீனத் தமிழ்நாட்டின் தந்தை (Father of modern Tamil Nadu) என்று போற்றப்பட்டார். அப்போது கலைஞருக்குத் தோள்கொடுப்பதற்கு தளபதி மு.க.ஸ்டாலின் வந்தார். ஓய்வறியா சூரியனுக்குத் துணையாக சுற்றிச் சுழன்றார். செயல் என்ற சிறந்த சொல்லுக்கு இலக்கணமும் ஆனார்.

துரோகிகளின் பத்தாண்டு அடிமைஆட்சிக்குப் பிறகு தனது போராட்டத்தாலும் மதிநுட்பத்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சியையும் அமைத்தார். அறிஞர்களைத் தேடித் தேடிக் கண்டெடுத்து அவர்களுக்கு உரிய இடத்தை வழங்கியதுடன், அவர்களின் அறிவும் ஆற்றலும் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்படவும் வழிவகை செய்கிறார்.

இந்தியா முழுவதையும் விழுங்கி ஏப்பமிட்ட பிறகும், தனது அகோரப் பசி தீராமல் தமிழ்நாட்டையும் விழுங்கிவிடத் துடிக்கும் இந்துத்துவ பாசிசப் பயங்கரவாத ஆக்டோ பசுக்கு எதிராக, ஒற்றை ஆளாக வாள் தூக்கி நின்று சவால்விட்டு வரும் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்குத் தோன்றாத் துணையாக இளம் சாமுராய் உதயநிதி ஸ்டாலின் எதிரிகளின் நெஞ்சில் இடியாய் வந்து இறங்கினார்.

அவரின் நுழைவே பாசிஸ்ட்டுகளைத் தெறித்து ஓடவிட்டது. அவர் உதிர்த்த “சனாதனஒழிப்பு” என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டு இந்தியா முழுவதுமிருக்கும் மொத்தச் சங்கிகளும் அதிர்ந்து போய் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைக்கண்டு எவ்விதச் சலனமும் இன்றி ஒற்றைச் செங்கல்லைக் கையில் ஏத்தி பாசிசப் பாஜகவை 2021, 2024 தேர்தல்களில் ஓட ஓட விரட்டினார். 2021 தோதலில் வென்று சட்ட மன்றத்திற்குள் நுழைந்து பாஜகவுக்கும் அடிமை அதிமுகவுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!பெரியாரின் கொள்கை உரம், அண்ணாவின் கனிவு, கலைஞரின் அப்டேட் தளபதியின் செயல் திறன் இவையனைத்தும் ஒன்று சேர்ந்த இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் வலம் வருகிறார். இடது கரத்தில் பெரியார் தத்துவம் எனும் கேடயத்தையும் வலது கரத்தில் நடைமுறை எனும் வாளையும் ஏந்திப் போர்புரியும் இளம் சாமுராயாகத் தோற்றமளிக்கிறார்.

அவருடைய வருகை, திராவிட இயக்கத்திற்குப் புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. பாகிஸ்ட்டுகள் இன்று புதிய புதிய அடிமைகளையும் துரோகிகளையும் உருவாக்கி, தமிழ் நாட்டையும் மக்களது வாழ்வையும் சீரழித்திட களமிறக்குகிற வேளையில், இளம் தலைவர் உதயநிதி தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று ஏழை எளிய உழைக்கும் மக்களை அன்றாடம் சந்தித்து அவர்களது துயர் துடைத்து, மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்படும் இளம் தலைவராக விளங்குகிறார். திராவிட மாடல் அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற முறையில், கிராமப்புற ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு வீரர்களாக உருவாக்கப்பட்டு, தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைப் பெற ஏதுவாக, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டுச் சாதனங்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் மாணவர்கள் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பதற்குக் காரணமாகியுள்ளார்.

‘தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ்’ என்று அழைக்கத்தக்க வகையில் முதலமைச்சர் விளையாட்டுப் போட்டியை நடத்தி, விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கி, நமது தமிழ் நாட்டுக் குழந்தைகள் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தையும் அளித்துள்ளார். அதேபோல உலக செஸ் சாம்பியன் (10 வயது) ஏ.எஸ்.ஷா்வானிகாவைப் பாராட்டிப் பரிசளித்துள்ளார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆனந்தகுமார், வைசாலி உள்ளிட்ட 819 வீரர்களுக்கு 21.40 கோடி ரூபாய் அளவுக்கு ஊக்கத் தொகையைப் பரிசாக அளித்து, தமிழ்நாட்டு வீரர்களை சர்வதேச அளவுக்கு உயர்த்தப் பாடுபட்டு வருகிறார்.

மற்றொருபுறம் இலவச மகளிர் பேருந்து உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி, திராவிட மாடல் அரசின் திட்டப் பயன்கள் அனைத்தும் சரியான முறையில் மக்களுக்குப் போய்ச் சேர்கிறதா என்பதையும் இளம் தலைவர் உதயநிதி ஊர் ஊராகப் பயணம் செய்து பார்வையிடவும் பரிசோதிக்கவும் செய்கிறார். கிராமப்புற எழை எளிய வீட்டுப் பிள்ளைகள் தேர்வு செய்யப்பட்டு வெளி நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு வர ஏற்பாடு செய்ததன் மூலம் அவர்களது திறன் மேம்பாட்டிற்கும் வழி செய்துள்ளார்.உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!அதேபோல கட்சிப் பணியில், திராவிட இயக்கக் கொள்கைகளை புதிய இளம் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக பயிற்சிப் பாசறைகளையும், பேச்சுப் போட்டிகளையும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டப்களிலும் நடத்தி, அறிவியல் பார்வையும் சமூக அக்கறையும் கொண்ட புதிய இளம் பேச்சாளர்களை, திராவிட இயக்கப் போர் வீரர்களை உருவாக்கியுள்ளார்.

மாய்த் திரையின் மயக்கத்திற்குப் பலியாகி, திரை பிம்பங்களின் பின் சென்று தங்களது வாழ்க்கையையும், எதிர் காலத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் வரலாற்று அறிவும், மொழி அறிவும் பன்முக ஆற்றலும் நிறைந்த இளைஞர்களை உருவாக்கி, தமிழ்நாட்டினை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

இளம் தலைவா் உதயநிதி ஸ்டாவின் திமுகவின் இளைஞரணித் தலைவராகவும், அதே நேரம் மாண்புமிகு துணை முதலமைச்சராகவும் இருந்து, புதிய, ஆரோக்கியமான ஓர் இளைய சமுதாயத்தைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவர்கள்தான் நாளைய தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்! அந்த நட்சத்திரங்களின் நடுவில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் இளம் சூரியன்தான் நமது இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின்! வாழ்க அவர் புகழ்! வளா்க அவரின் தொண்டு!

திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!

MUST READ