spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தலையங்கம்SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!

SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் வாயிலாக திமுகவை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் சதித்திட்டம். இந்த திட்டத்திற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடைந்தையாக இருப்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

we-r-hiring

இந்தியாவில் மேற்குவங்கம், கேரளா, கர்நாடக, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் எதிர்கட்சிகள் தான் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் எல்லோரையும் விட தமிழ்நாட்டில் திமுக அரசு மட்டும்தான் ஆர்.எஸ்.எஸ்.- பாஜகவின் கொள்கைக்கு எதிராகவும், பாஜக அரசின் நடவடிக்கை களுக்கு எதிராகவும் துணிந்து நிற்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்ற முன்மாதிரியான அரசாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டத்தையும் தவிர்க்க முடியாமல் பாஜக தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறது.

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளீர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவற்றை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1967 இல் இருந்து இருமொழி கொள்கையாக பின்பற்றி வருகிறோம். அதை அழித்து மும்மொழி கொள்கையை கொண்டுவர வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். தமிழ்நாட்டில் இந்தியை எந்த வழியிலாவது நடைமுறை படுத்த வேண்டும் என்று வடமாநிலத்தவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எதிர்வினையாற்றி தமிழ்மொழியை பாதுகாத்து வருவது பெரியார், அண்ணா, கலைஞர், திமுக என்கிற கட்டமைப்பு.

மொழியை பாதுகாப்பதில் நாம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறோம். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இப்போதுதான் விழித்திருக்கிறது.

ஆடுக்கு தாடியும் நாட்டிற்கு ஆளுநரும் அவசியமா என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா கேள்வி எழுப்பினார். இப்போது ஆளுநரின் அடாவடி தனத்திற்கு திராவிட மாடல் அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

2021 இல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.

கல்விக்கான நிதியை கொடுக்காமல் ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதையும் சமாளித்துக் கொண்டு கல்வி வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

ஆளுநரை வைத்து நெருக்கடி கொடுத்தார்கள், முறையாக கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் நெருக்கடி கொடுத்தார்கள், அமலாக்கத்துறையை வைத்து நெருக்கடி கொடுத்தார்கள் எதற்காகவும் திமுகவும், திமுக அரசும் அஞ்சவில்லை. தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.” முழக்கத்தை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் எல்லோரும் பணிந்து விட்டார்கள், அதிமுக அடிபணிந்து விட்டது, பாமக பணிந்து விட்டது, நாம் தமிழர் கட்சி பணிந்து விட்டது, நேற்று முளைத்த தவெகவிற்கும் அவர்கள் தான் முதலாளி. இப்படி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், இயக்கங்கள், தலைவர்கள் என்று எல்லோரையும் அடிபணிந்து விட்டார்கள்.

அவர்களால் திமுகவை மட்டும் வீழ்த்த முடியவில்லை.. பணியவைக்க முடியவில்லை

திமுகவை வீழ்த்த பாஜக எடுத்துள்ள கடைசி ஆயூதம் தான் SIR என்கிற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்.

வாக்கு திருட்டு என்பதற்கும் தேர்தல் திருட்டு என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. வாக்குத் திருட்டு என்பது ஒரு உண்மையான வாக்காளருக்கு மாற்றாக போலியான ஒருவர் வாக்கு அளிப்பது. தேர்தல் திருட்டு என்பது ஒரு கட்சி பெற்ற அபார வெற்றியை அப்படியே அபகரித்துக் கொண்டு இன்னொரு கட்சி வெற்றிப் பெற்றதாக அறிவித்து ஆட்சியை அமைப்பது. அதாவது தேர்தல் முறை ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைப்பது. அந்தப் வேலையை தான் SIR என்ற பெயரில் பாஜக செய்து வருகிறது.

ஹரியானா போன்று பிகார் போன்று தமிழ்நாட்டில் நடக்காது, இங்கே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் பலமாக இருக்கிறார்கள். பார்த்து கொள்வார்கள் என்று ஏமாளிகளாக இருந்துவிட கூடாது.

ஹரியானாவில் போலி வாக்காளர்கள் 25 லட்சம் பேர் சேர்க்கப்பட்ட விவகாரம் எந்த பூத் ஏஜெண்டுகளுக்கும் தெரியாமல் centralised software மூலம் நடந்தது.

கர்நாடகா மாநிலம் ஆலந்த் தொகுதியிலும் அப்படிப்பட்ட போலி வாக்காளர்கள் மொத்தமாக மேல்மட்ட அளவில் மென்பொருளை பயன்படுத்தி சேர்க்கப் பட்டார்கள். இந்த மோசடியை பூத் அளவில் யாருமே தடுக்க முடியாது. ஏனெனில் இது அவர்களின் பார்வைக்கே வராது. நேரடி சிஸ்டத்தின் மூலமாக போலி வாக்காளர்கள் பட்டியல் ஏற்றப்படும்.

SIR என்பது தற்போது வாக்குரிமை வைத்திருக்கும் வாக்காளர்களை அது இல்லை இது இல்லை என்று சொல்லி பல லட்சம் பேரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மத்தியில் இருந்து லட்சக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்த்து விடுவார்கள். ஒரே வீட்டு முகவரியில் 20,30, போலி வாக்காளர்களை சேர்த்து விடுவார்கள். இந்த மோசடியை தான் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறார்.

அந்த போலி வாக்காளர்களுக்கு இடம் ஏற்படுத்தி தரவே உங்கள் வாக்குரிமை நீக்கப்படுகிறது!

தமிழகத்தை பொறுத்தவரை இங்கே பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் தான்.
அதனால் இங்குள்ள யாரை நீக்கினாலும் அவர்களுக்கு லாபம்.
அந்த இடத்தில் போலி வாக்காளர்களை மென்பொருள் மூலம் சொருகி விட்டு கள்ள ஓட்டு மூலம் வெற்றிப்பெறுவதே அவர்களின் திட்டம்.

SIR மோசடி மூலம் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிப் பெற்றால், அதை நியாயப்படுத்தி பேசுவதற்காக இப்போது வருகின்ற கருத்து கணிப்புகள் உதவி செய்யும்.

இங்கே மக்களை ஆர்ப்பாட்டம் , போராட்டம் வாயிலாக SIR எனும் வாக்கு பறிப்பை தடுத்து நிறுத்தப் படாவிட்டால் 2026இல் தமிழகத்தில் தேர்தல் திருட்டு மூலம் பாஜக-அதிமுக ஆட்சி அமைவது உறுதி.

 

 

MUST READ