spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்…ஏறுமா இறங்குமா என்ற ஏக்கத்தில் மிடில் கிளாஸ் மக்கள்…

வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்…ஏறுமா இறங்குமா என்ற ஏக்கத்தில் மிடில் கிளாஸ் மக்கள்…

-

- Advertisement -

இன்றைய (நவ.10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்…ஏறுமா இறங்குமா என்ற ஏக்கத்தில் மிடில் கிளாஸ் மக்கள்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.110 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,410க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து 1 சவரன் ரூ.91,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வேத சந்தையில் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளதால், நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்திருப்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் விலை உயர்ந்த தங்கம் மூன்று நாட்கள் விலை சரிந்தது. இந்த வாரமும் அதே போக்கு நீடிக்கவே வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமிற்கு ரூ.2 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.167 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.2000 உயர்ந்து 1 கிலோ ரூ.1,67,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் ரூ.207 என்ற உச்சத்தை எட்டிய நிலையில், படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்…. டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

MUST READ