spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களின் சந்தேகங்களைத் தீர்க்க மட்டுமே திமுக வார் ரூம் திறந்துள்ளது - டி.ஆர்.பாலு

மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க மட்டுமே திமுக வார் ரூம் திறந்துள்ளது – டி.ஆர்.பாலு

-

- Advertisement -

புனிதமாக முன் நின்று தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமே கள்ளத்தனமாக செயல்படுவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க மட்டுமே திமுக வார் ரூம் திறந்துள்ளது - டி.ஆர்.பாலு ஒன்றிய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை கண்டிப்பதாக கூறியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்வதை கைவிட வலியுறுத்தியும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை சேப்பாக்கம் சிவானந்த சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த தலைவர் முத்தரசன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாசுகி மற்றும் கூட்டணி  கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பியவாறு, கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திமுக உட்பட கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, வாக்குரிமை மற்றும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்ற திமுக, சிபிஎம் உட்பட அரசியல் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மக்களை திரட்டி போராட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்று வாசுகி கூறினார்.

we-r-hiring

இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான முத்தரசன், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இப்பொழுது தான் முதல் முறையாக போராட்டம் நடக்கிறது. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியால் மற்ற பிரதமர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கி தந்திருக்கிற மகத்தான அமைப்பு தேர்தல் ஆணையம் என்று கூறினாா். தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மை இழந்துவிட்டது தான் வெட்கக் கேடான விசயம் எனவும் விமர்சித்தார். பிஜேபிக்கு எதிராக யார் வாக்களிப்பார்களோ அவர்களை தேடி கண்டுபிடித்து நீக்குவது தான் இந்த முறை. அப்புறம் எல்லா இடங்களிலும் பாஜக ஆட்சி தான். தமிழகத்திலும் பாஜக ஆட்சி தான். இந்த கனவோடு தான் பீகாரில் தொடங்கினார்கள் என்றார். இப்படிப்பட்ட ஜனநாயக படுகொலை 1952-ல் இருந்து இப்போது வரைக்கும் நடைபெற்றது கிடையாது. இப்போது நடக்கிறது. ஒரு மாதத்திற்குள் விண்ணப்பங்கள் வழங்கி வாங்குவது என்பது சாத்தியமல்ல. கால அவகாசம் போதுமானது அல்ல. எனவே நிறுத்த சொல்கிறோம் என்று கூறினாா்.

ஆர்ப்பாட்டத்திற்கான கண்டன உரை நிகழ்த்திய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, பீகார் விவகாரத்தில் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்தும் இதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றால், பிஜேபியின் கட்டளையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தேர்தல் எவ்வளவு ஒழுங்கீனமாக செயல்படுவதற்கு அவர்களே அடித்தளமாக இருக்கிறார்கள் என்றார். மக்கள் திரளாக கூடியிருப்பதை பார்த்து இந்த போராட்டம் வெற்றி பெற்று இருக்கிறது என்று கூற முடியும். பிஜேபியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் இருக்கும் போது தேர்தல் நடத்துவது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது என்றார். இந்த நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது எனவும் அசாமில் ஏன் எஸ் ஐ ஆர் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், ஏனென்றால் பாஜக ஆட்சி நடக்கிறது. பிரேசில் மாடல் அழகிக்கு இங்கு ஓட்டு இருக்கிறது. 25  இடங்களில் ஓட்டு போட்டதாக பதிவு செய்தற்கு உதவியது யார் என கேள்வி எழுப்பினார்.

இந்த தேர்தலில் தான் தீவிரமாக பணியாற்ற வேண்டிய காலம். இப்போது இருந்தே பணியாற்ற வேண்டும். ஏனென்றால் இப்போது இருந்து வாக்குகள் புறக்கணிக்கப்படுகிறது. அதை பாஜக செய்து கொண்டு இருக்கிறது. இது சாதாரண போராட்டம் ஆர்ப்பாட்டம் அல்ல. புனிதமாக முன் நின்று யார் தேர்தல் நடத்த வேண்டுமோ அவர்களே கள்ளத்தனமாக செயல்படுகிறார்கள் இந்த கள்ளத்தனத்தை கண்டித்தும் அராஜக அரசை கண்டிதும் இந்த ஆர்ப்பாட்டம் என்று தெரிவித்தாா்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு , திமுக  பொருளாளர்  டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசும்போது, SIR செயல்முறை தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்காக திமுக கட்சியின் சார்பாக நாங்கள் உதவி மையத்தைத் திறந்துள்ளோம். யார் வேண்டுமானாலும் அழைத்து தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். உச்ச நீதிமன்றத்தில் SIRக்கு ஆதரவாக அதிமுக வழக்குத் தொடர்ந்தது குறித்து, டி.ஆர்.பாலு கூறுகையில்,  ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் திருத்தம் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகிறது. பிறகு, தேர்தல் ஆணையத்தால் ஏன் இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுகிறது?. சிறப்பு தீவிர திருத்தம் செய்ய அரசியலமைப்பில் எந்த ஏற்பாடும் இல்லை. தேர்தல் ஆணையம் செயல்படுவதை விட அதிகமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. பொதுமக்களின் சந்தேகங்களைத் தீர்க்க மட்டுமே திமுக வார் ரூம் திறந்துள்ளது என்றார். எஸ் ஐ ஆரை சில கட்சிகள் ஆதரிக்கிறதே என்ற கேள்விக்கு அது “கட்சிகள் அல்ல காட்சிகள்“ என்று தெரிவித்துள்ளாா்.

அதிமுக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – திருமாவளவன் விமர்சனம்

MUST READ