எஸ் ஐ ஆர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குறுக்கீடு செய்யும் எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
சென்னை ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிய SIR-க்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம், “மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அவசரக் செயற்குழு கூட்டம் இந்திய தேர்தல் ஆணையம் தற்பொழுது நடைமுறைப்படுத்தி வரக்கூடிய சிறப்பு வாக்காளர் திருத்த மறுசீராய்வு நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. எஸ் ஐ ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் சிறப்பு வாக்காளர் சீராய்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தில் 324 வது பிரிவின்படி தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்களை சேர்க்க கூடிய அதிகாரம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது தவிர இருக்கின்ற வாழுகின்ற வாக்காளர்களை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் சட்டத்தில் 324வது பிரிவு தரவில்லை. CAA குடியுரிமையை மறைமுக நடைமுறைப்படுத்தக் கூடிய பயிற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிதாக வாக்காளரை சேர்க்கும் பொழுது அவர் இந்திய குடிமகனா என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது தவிர ஏற்கனவே இருக்கக்கூடிய வாக்காளர்களின் குடியுரிமையை பரிசோதனை செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

இந்த சிறப்பு தேர்தல் வாக்காளர் பட்டியல் சீராய்வு என்பது சிறப்பு என்று வார்த்தையை சேர்த்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தீவிர வாக்காளர் சீராய்வு நடவடிக்கைகளை கடந்த காலங்களிலே நடத்தி உள்ளார்கள். 2001-ம் ஆண்டு 197 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எஞ்சிய தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இந்த வாக்காளர் சீராய்வு நடைபெற்றது. அப்பொழுது கூட இந்த குடியுரிமை பற்றி எந்த கேள்வி கேட்கப்படவில்லை. அது மட்டும் இல்லாமல் வாக்குச்சாவடி நிலை அலுவலர் BLO தான் அந்த படிவத்தை நிரப்பவர்களே தவிர வாக்காளர்களை நிரப்ப வேண்டும் என்பது புதிய நடைமுறை. அதனால்தான் அந்த சிறப்பு என்ற வார்த்தையை சேர்த்து உள்ளார்கள்.
இந்த சிறப்பு வாக்காளர் சீராய்வு என்பதற்கு சட்டத்தில் எந்த விதமான வழியேல்லை. எனவே இது சட்டவிரோத நடவடிக்கை. திராவிட முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து, விசாரணைக்கு உள்ளது. விசாரணையில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் சொல்வதற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். உச்சநீதிமன்றம் நல்ல தீர்வை தரவேண்டி எதிர்பார்க்கின்றோம். இதுவரை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறை உணர்ந்து சட்டவிரோதமான அரசியல் அமைப்பு சட்ட விரோதமாக நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது என்பதை உணர்ந்து சிறப்பு வாக்காளர் திருத்த மறு ஆய்வு பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த தினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தோளில் கருப்பு துண்டு அணிந்து கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கின்றோம். S I R பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் சில இடங்களில் வாக்காளருக்கு இரண்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் நிர்வாகிகள் வாக்காளருக்கு இரண்டு படிவம் கொடுக்க வேண்டும் இரண்டையும் அந்த வாக்காளர் நிரப்ப வேண்டும். ஒன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் படிவத்தை பெற்றுக் கொண்டேன் என்று கையொப்பமிட்டு வாக்காளர்கள் கொடுக்க வேண்டும். ஒரு படிவம் மட்டும் தான் கொடுத்து உள்ளார்கள் இது சரியான நடவடிக்கை இல்லை.
ஏற்கெனவே பீகாரில் முறைகேடாக எஸ் ஐ ஆர் நடத்தி நேற்று கருத்துக்கணிப்பில் பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறது. ஆனால் முடிவு என்னவாக உள்ளது என்பதை பார்க்கலாம். பீகாரில் எஸ்ஐஆர்-ல் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் அது போன்ற ஒரு மோசடி நடத்துவதற்கு அவர்கள் முனைகிறார்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் விழிப்பாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் தந்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டணியில் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தில் நாங்கள் இடம்பெற்றிருக்கின்றோம். அந்த வகையில் தேர்தல் ரீதியாக மக்களை அரசு திட்டங்களை கொண்டு செல்வதற்கும் அரசின் திட்டங்களை பெற்று தருவதற்கும் உரிய நடவடிக்கைகள் பயிற்சிகளை தொண்டர்கள் செய்ய வேண்டும்.
அதிமுக விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிந்தனை செய்திருக்கிறார்கள். அதிமுக பாஜகவுக்கு சேவகம் செய்யக்கூடிய கட்சி. விமர்சனங்களை நிரூபிக்க கூடிய அளவில் எஸ் ஐ ஆர் தொடர்பான அதிமுக உடைய நிலைப்பாடு காட்டுகிறது. குறியீடு என்று பல மக்களுடைய வாக்குகளை பறிக்கக்கூடியது. தமிழ்நாட்டு மக்கள் உடைய சதி திட்டம் என்பதை புரிந்து கொண்டோம். பாஜக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக செயல்படுகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியை மன்னிக்க மாட்டார்கள். பாஜகவுக்கு மனதை எந்தவிதமும் நோகடிக்கும் நடவடிக்கையும் இறங்கக்கூடாது என்று ஒற்றை நோக்கத்தோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.
வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் – கண்டிப்புடன் கூறிய முதல்வர்


