spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவீடியோவில் கதறிய விஜய்! அம்பலமாகும் பாஜக, தேர்தல் ஆணையம்! எஸ்.ஐ.ஆரில் தவெக-வை வைத்து புது திட்டம்!

வீடியோவில் கதறிய விஜய்! அம்பலமாகும் பாஜக, தேர்தல் ஆணையம்! எஸ்.ஐ.ஆரில் தவெக-வை வைத்து புது திட்டம்!

-

- Advertisement -

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுக களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தவெக களத்திலேயே இல்லாதபோதும், விஜய் திமுக Vs தவெக என்று சொல்வது மோசடி வேலையாகும் என்று பத்திரிகையாளர் மதன் அறிவழகன் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளது குறித்து பத்திரிகையாளர் மதன் அறிவழகன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் எஸ்.ஐ. ஆரில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும், அது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். திடீரென வாக்காளர்களுக்கு வாக்குகள் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வாக்காளர் பட்டியலில் புதியவர்களை சேர்த்தால் மட்டும் போதுமானது. அதேபோல், இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கினால் மட்டுமே போதும். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை எல்லாம் தேவையில்லை என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் எஸ்.ஐ. ஆர். நடவடிக்கையின் மூலம் தவெக வாக்காளர்களை நீக்க தில்லு முல்லு நடப்பதாகவும் விஜய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

People are confused by voter registration correction work..!! Will the Election Commission clarify??

பல மூத்த ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள் சொல்வது என்ன என்றால்? எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் பாதிக்கப்பட போவது புதிய வாக்காளர்கள் தான் என்று சொல்கிறார்கள். காரணம் அவர்கள் 2002ஆம் ஆண்டில் வாக்களித்திருக்க மாட்டார்கள்.  அவர்களுக்கு எபிக் நம்பர் இருக்காது. புதிதாக விண்ணப்பிக்கும்போது தேர்தல் ஆணையம் பல்வேறு ஆவணங்களை கேட்டுள்ளது. அந்த ஆவணங்களை விண்ணப்பித்து வாங்கிட வேண்டும். இவ்வளவு பெரிய வேலைகள் இருக்கும்போது, தவெக தரப்பில் எந்த வேலையும் செய்யவில்லை. தற்போது GEN – Z கிட்களே உஷாராக இருக்க வேண்டும். போய் வேலையை பாருங்கள் என்று சொல்கிறார். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக சார்பில் ஒரு உதவி மையம் அமைத்து, கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்காளர்களுக்கு உதவி இருக்க வேண்டும்.

அல்லது பிஎல்ஏ எனப்படும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் குறித்து உரிய பயிற்சி வழங்கி, அவர்கள் மூலம் விண்ணப்பங்களை பெற்றிட வேண்டும். அது மட்டுமின்றி பின்னர் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஒன்றரை மாதம் நடைபெறும் இந்த வேலையை விஜய் 9 நிமிட வீடியோவில் முடித்துவிட்டார்.

tn election commission

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி, அர்ச்சனா பட்நாயக், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தங்களையும் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிட வேண்டும். ஆனால் அவர்கள் கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய முகவரிக்கு அந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். இதை ஊடகங்களே ட்ரோல் செய்து வருகிறார்கள். ஒரு அமைப்பு எப்படி இயங்குகிறது என்று தெரியவில்லை. அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும் மறுக்கிறார்கள்.

தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு அழைப்பதற்கு முதலில் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். விஜய்க்கு எஸ்.ஐ.ஆர் குறித்து எழுதி கொடுத்தவர்கள், அதற்கு காரணமாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கொண்டுவந்தது பாஜக தான் என்று எந்த இடத்திலும் இல்லை. எஸ்.ஐ.ஆர் குறித்து பேசிய விஜய், திமுகவினர் தங்களை தடுக்கிறார்கள் என்று சொல்கிறார். அப்படி என்றால் எப்படி தடுக்கிறார்கள் என்று விஜய் சொல்லவில்லை. வேண்டும் எனில் குறிப்பிட்ட பகுதியில் விண்ணப்பங்கள் வழங்காமல் இருந்திருக்கலாம். அப்படி எதாவது புகார் வந்துள்ளதா? எஸ்.ஐ. ஆர். விவகாரம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் மென்பொருள் மூலமாக மோசடியில் ஈடுபடும் பட்சத்தில் பல்க் வாக்குகள் திமுகவிடம் இருந்து பிரித்து, விஜய்க்கு செல்வது போன்று  செய்யலாம். விஜய், திமுகவின் வாக்குகளை பிரித்து விட்டதால் அதிமுக – பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்று நேரேட்டிவ் செட் செய்வார்கள். காரணம் விஜய், எப்போது  பேசினாலும் தனக்கு, திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார். அப்போது, திமுகவிடம் இருந்து விஜய் வாக்குகளை பிரித்துவிட்டார் என்று பின்னாளில் நிரூபிக்க முயற்சிப்பார்கள்.

விஜய் போன்ற, இளைஞர்களுடன் நேரடி தொடர்பில் உள்ள நபருக்கு, எஸ்.ஐ.ஆர் குறித்து பெரிய அளவிலான புரிதல் இருக்க வேண்டும். ஒரு ஏ4 பேப்பரை பார்த்து பார்த்து பேசுவதால் ஒரு பயனும் கிடையாது. திமுக Vs தவெக என்று சொன்னால் அவர்கள் களத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடுவது போன்று, நீங்களும் ஈடுபட வேண்டும். அப்போது விஜய் பேசினால், அவருடைய பேச்சில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் விஜய் விர்ச்சுவலில் தான் பேசி கொண்டிருக்கிறார். அவருக்கான வாக்கும் விர்ச்சுவலில்தான் வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்

 

MUST READ