வோ்க்கடலையை பிடிக்காதவா்கள் யாரும் இருக்க முடியாது. அது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஒரு நாளைக்கு ஒரு கைபிடி வோ்க்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
வோ்க்கடலை ஒரு ஹெல்தியான சூப்பா் புட் ஆகும். இது பாதாம் பருப்புக்கு நிகரான ஊட்டச்சத்தினை தருகிறது என்றால் நீங்கள் நம்புவீா்களா?
இதய ஆரோக்கியம்:
வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரித்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

எடை கட்டுப்பாடு:
வேர்க்கடலை பசியைக் குறைத்து, எடை குறைப்புக்கு உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
வேர்க்கடலையில் புரதம், நார்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் வோ்க்கடலையில் சுமாா் 25 கிராம் புரதம் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி:
வேர்க்கடலை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
புற்றுநோய் தடுப்பு:
வேர்க்கடலையில் உள்ள பாலிபினோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவும்.
பக்க விளைவுகள்:
அதிக அளவில் வோ்க்கடலையை சாப்பிட்டால் அசிடிட்டி, மலச்சிக்கல், வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
முக்கிய குறிப்பு:
இதய நோய் அல்லது கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வேர்க்கடலையை அளவோடு சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவது பற்றி மருத்துவரை அணுகுவது மிகச் சிறந்தது.


