சென்னை வேளச்சேரியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது.
சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம் இளைஞர் ஒருவர் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்த பெண்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறைக்கு புகார் அளித்தும் அங்கிருந்த நபர் மீண்டும் மீண்டும் பெண்களிடம் ஆபாச செய்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பெண்கள் அவரை வீடியோ எடுத்த பின் அவர் அங்கிருந்து புறப்பட்டார். வேளச்சேரியில் ஒரு நபர் பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது.
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மோசடி செய்த பெண் தாசில்தார், ஆா்.ஐ அதிரடி கைது!!


