தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர் 3 கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் இளமதி உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து பேசும் பொழுது மாநகராட்சி 14வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபால் உணவுத் துறை அமைச்சர் சக்கரவாணி குறித்து அவதூறாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் அவரை முற்றுகையிட்டு தர்ணா செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பேசுகையில், மாநகராட்சி சட்ட விதிகளின்படி

- அமைதியான கூட்டத்தை சீர்குலைத்தல்.
- தலைமைக்கு கீழ்ப்படியாமல் இருந்து வருவது
- தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுவார். என கூறி 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்வதாக சபையில் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாமன்ற உறுப்பினர் கூட்டத்திலிருந்து வெளியேற மறுத்தார். மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலை இடை நீக்கம் செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்தினார். இதில், திமுக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கைகளை தூக்கி ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து தனபால் தானாக கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
கொங்கு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை – முதல்வர் பெருமிதம்


