நெல் கொள்முதலில் ஈரப்பதம் மற்றும் MGNREGA நிதி விவகாரம் : திமுக மக்களவைக் குழு தலைவர் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு நெல் கொள்முதலின்போது அதன் ஈரப்பதத்தை 17 முதல் 22 சதவீதமாக கணக்கிட்டு கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை அது தொடர்பாக எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை.
மேலும் MGNREGA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய 1290 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த விவகாரங்கள் தொடர்பாக அவை அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் எனக்கூறி தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். 12 மாநிலங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
கனிமொழி எம்.பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

ஜனநாயகத்தை நிலைநிறுத்த தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியம் குறித்து மக்களவை அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும் என கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை எதிர்க்கட்சிகளின் குழு தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் பிரச்சனைகளை எழுப்புவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளது.


