spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

-

- Advertisement -

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆறு அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…சொந்த உபயோகத்திற்கு வாகனங்களை வைத்துள்ளவர்கள் சட்ட விதிமுறைகளை மீறி வாடகை பயன்பாட்டிற்கு விடுவதால், முறையான வரிகட்டி வாடகை வாகனங்களை இயக்குபவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்த சட்டவிரோதமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸி போன்றவற்றை இயக்குவதை நிறுத்த கோருவது உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி,  மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, உரிமைகுரல் ஓட்டுநர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்தியாவின் பொருளாதார  வளர்ச்சியில் சந்தேகம்…IMF-ன்புதிய தகவல்…

MUST READ