spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்

தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்

-

- Advertisement -

புதுச்சேரியில் தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி தெரிவித்துள்ளாா்.தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தவெக கட்சியின் சாா்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை  மேற்கொண்டு வருகிறாா். முதல் பிரச்சாரத்தை திருச்சியில் செப்டம்பா் 14 ஆம் தேதி தொடங்கினாா். அதன் பின்னா் நாமக்கல், கரூாில் செப்டம்பா் 27 ஆம் தேதி பிரச்சாரம் செய்தாா். அதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த துயரச் சம்பவம் நடைபெற்றது.  இதில் பலரும் காயமடைந்தனா். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் தவெக சாா்பில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தவெக நிா்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அா்ஜீன் ஆகியோா் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனா். முதல்வா் ரங்கசாமி, அந்த மாநில டிஜிபியுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களை சந்தித்த, டிஜிபி சத்தியசுந்தரம், தவெகவிற்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் திறந்த மைதானத்தில் பொது கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் தவெக நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தாா்.

கனமழை எச்சரிக்கை காரணமாக 23 விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

we-r-hiring

 

MUST READ