spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்ற விவகாரம்…நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் – சண்முகம் வலியுறுத்தல்

திருப்பரங்குன்ற விவகாரம்…நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் – சண்முகம் வலியுறுத்தல்

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பை தற்போது அமல்படுத்தக் கூடாது என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பரங்குன்ற விவகாரம்…நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் – சண்முகம் வலியுறுத்தல்

we-r-hiring

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையிடை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்றும் நாளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தாா்.

செய்தியாளர்களின் சந்திப்பின் போது அவர் பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் பாரம்பரிய இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, மாற்று இடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை நிறைவேற்றினால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சனைகள் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக தமிழ்நாடு அரசு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தற்போது ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகளை வைத்து தான் பாஜக வளர்ந்து வருகிறது. எனவே அதற்கு தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காமல் மேல்முறையீடு உடனடியாக செய்து மாற்று தீர்ப்பை வாங்க வேண்டும்.

நீதிமன்றம் அளிக்கும் அனைத்து தீர்ப்புகளும் உடனடியாக ஏற்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேல்முறையீடு செய்யலாம். ஆனால் தற்போதைய தீர்ப்பை முதலில் அமல்படுத்திவிட்டு பின்னர் மேல்முறையீடு செய்வது தவறு. இது இரண்டு சமூகங்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுத்தும்

மதநல்லிணக்கத்திற்கு ஊடு விளைவிக்க வேண்டும் என்பதற்காக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நேரில் ஆய்வு செய்ததால் நல்ல தீர்ப்பு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, சிக்கந்தர் தர்கா அருகே மாற்று இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

தீபம் ஏற்றுவதை யாரும் எதிர்க்கவில்லை. இது ஆண்டு தலைமுறைகளாக நடைபெறும் வழிபாட்டு முறை. பாரம்பரிய இடத்தை மாற்றுவது தேவையற்ற அச்சத்தை உருவாக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்

MUST READ