தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேசியதாவது, “மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருக்கிறது. குறிப்பாக, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.3,112 கோடி, நெல் கொள்முதல் மற்றும் மானியங்களுக்கான நிலுவைத் தொகை சுமார் ரூ.2,670 கோடி, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தினால், ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.3,548 கோடி எனத் தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் கூறினார்.
ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


