விஜய் முன்னிலையில் தெவகவில் இணைந்தாா் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
திராவிட இயக்கத்தின் முக்கிய மேடைப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், தவெகவில் இணைந்துள்ளாா். அண்மைக்காலமாக திமுக மீது வெளிப்படுத்திய அதிருப்தியின் பின்னணியில், அவரது இந்த புதிய அரசியல் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் த.வெ.கவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அனுபவசாலி பேச்சாளராகவும், பல்வேறு கட்சிகளில் பணியாற்றியவராகவும் இருக்கும் அவர், மதிமுக, திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் அரசியல் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இணைந்ததை தவெகவின் விரிவாக்க முயற்சிகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


