spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி - செந்தில் தொண்டைமான்

இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்

-

- Advertisement -

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு, ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி - செந்தில் தொண்டைமான்இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனைத்தொடர்ந்து, அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பலரும் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.  இதனால் ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா். நிலைமையை சமாளிக்க இந்தியா “ஆபரேஷன் சாகா் பந்து“ மூலம் 27 டன் நிவாரணப் பொருட்களை விமானங்கள் மற்றும் கப்பல் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. 80 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் 2 சீட்டாக் ஹெலிகாப்டர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்த் மீட்புப் பணிகளுக்காக அனுப்பியிருந்தது.

இந்நிலையில், தேவையான நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இலங்கைக்கு சரியான வகையில் உதவி கிடைத்தது. உடைமை இழந்து உயிரைக் காப்பாற்ற இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் இது பேருதவியாகும். இலங்கை போராடி வரும் நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேருதவி பல லட்சம் மக்களின் மீட்சிக்கு உதவும் என ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் ரூ.12 இலட்சம் பெற்று மோசடி!! பெண் உட்பட 3 பேர் கைது!!

we-r-hiring

MUST READ