அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாக கூறி, யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜோ மைக்கேல் ப்ரவீன் மீது நான்கு பிரிவுகளில் அடையார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோ மைக்கேல் ப்ரவீன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபிகா ஹேம்குமார், ஜோ மைக்கேல் ப்ரவீன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை நிரூபிக்ககாததால், அவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
புதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது – வேல்முருகன் வலியுறுத்தல்



