திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.
திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்க கூட்டம் சென்னை பாடி யாகவா தெருவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி பகுதி கழக நிர்வாகிகள் எம்.டி.ஆர்.நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய செந்தில் வேல்,
தமிழகத்திற்கு கிடைக்கும் நல்ல திட்டங்களை கெடுப்பதற்காக தற்பொழுது ஒரு கூட்டம் வந்துள்ளது. ஆண்டாண்டு காலமாக திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்னி வருகின்றனர். ஆனால் சண்டையிடுவதற்கு என இருக்கின்ற கூட்டம் தர்கா அருகே உள்ள அளவீட்டு கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என சண்டை போடுகின்றனர். தமிழ்நாடு வட மாநிலம் போல சண்டையிட வேண்டுமென்று கூட்டம் முருகனை கையில் எடுத்துள்ளது. திருவிளையாடல் திரைப்படத்தில் ஞானப்பழத்திற்கான தந்தை மகனுக்கு ஏற்பட்ட சண்டையை வைத்து பாமகவை நாசுகமாக கிண்டல் அடித்தார்.
தமிழ் கடவுள் சாதி என்பது முருகன் திமுகவிற்கு முதலமைச்சர் எதிரானவர் அல்ல. பிரச்சனை மதம் அல்ல மதவாதிகள் தான் பிரச்சனை என கூறினார். தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றுவதற்கு ஒரு கூட்டம் உள்ளது அதற்கு நாம் இறையாக கூடாது என கூறினார். தொண்டர்கள் கூட்டத்தில் விஜய் பேசியது மேற்கோள் காட்டி விஜய் தலைமை தற்குறி எனவும் கிண்டல் அடித்தார். ஒரு நடிகரின் கார் பின்னாடி ஓடுவதை அவமானமாக கருதாது தான் கரூரில் 41 உயிர் பறிபோனது. நாடாளுவதற்கு நடிகர் என்பது தகுதி அல்ல நமக்காக சிந்திக்கிறவர்களை தான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன்,
திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக நீதிபதி சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது வெறும் விளக்கேற்றும் பிரச்சனை அல்ல சொத்துரிமை என நீதிபதி கூறுகிறார் எந்த தூணில் விளக்கேற்றுகிறோம் என்பதை பொறுத்து சொத்துரிமை மாறுமா என கேள்வி எழுப்பினார். கோவிலில் விளக்கேற்ற சொன்னால் தர்காவில் தான் விளக்கேற்றுவோம் என கூறுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் ஒரு கலவரத்தை தூண்ட முயற்சி செய்தார்கள் ஆனால் கலவரத்தை தூண்ட முடியாமலேயே தோற்றுப் போனார்கள்.
அதேபோல் எப்பொழுதும் திராவிடத்தையும் பெரியாரையும் இழிவு செய்து பேசிக்கொண்டிருந்த ஒருவர் நாங்கள் தமிழர்கள் என கூறிக் கொண்டிருந்தவர் (சீமான்) நேற்று ஆர் எஸ் எஸ் மேடையில் அடைக்கலம் ஆகியிருக்கிறார். அதுதான் அவருடைய வேலை அதுதான் அவருக்கு கொடுத்த பணி. கை ரிக்ஷாக்களை ஒழித்தவர் கருணாநிதி ஆனால் அவருக்கு வாக்களிக்காமல் ரிக்ஷாக்காரனாக நடித்தவருக்கு வாக்களித்தனர், அது மட்டும் இல்லாமல் ரிக்ஷாகாரனாக நடித்தவருடன் நடித்தவருக்கும் வாக்களித்தார்கள் மக்கள். தடம் மாறுவதும் தடுமாறுவதும் ஒன்றுதான்.
நன்றாக நடனமாடுகிறார் என்பதற்காக முதலமைச்சர் ஆக வேண்டும் என விரும்புகிறார். விரும்புவது குற்றம் அல்ல அதற்காக நாம் வாக்களிப்பது தான் குற்றம் என்பதை நாம் தான் உணர்த்த வேண்டும். நடனத்தை ரசியுங்கள் நடனத்திற்காக ஒருவரை கொண்டுவந்து மேலே உட்கார வைக்காதீர்கள். வாருங்கள் போராடுங்கள் அனுபவத்தைப் பெறுங்கள் பிறகு முதலமைச்சர் என்ற கனவுக்குள் வந்து சேருங்கள். உங்களை வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை என கூறினார்.
சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….


