வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் மற்றம் வெள்ளியின் விலை. சென்னையில் ஒரு சவரன் ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,120க்கும், கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,515க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.440 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.1 இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், ஆபரணத் தங்கம் வாங்குவோர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. விலை ஏற்றம் தற்போதைக்குத் தொடருமா அல்லது குறைய வாய்ப்புள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

வெள்ளியின் விலையும் உயர்வு
தங்கம் விலைக்கு சற்றும் சலைக்காமல் தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் இந்த அதிரடி ஏற்றத்திற்குக் கீழ்க்கண்ட காரணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன:
சர்வதேச சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைந்து, அது தங்கத்தின் விலையை உயர்த்தி வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பை அதிகரிக்க தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவிப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.
வெள்ளியைப் பொறுத்தவரை, சோலார் பேனல் தயாரிப்பு போன்ற தொழில்துறை தேவைகள் (Industrial Demand) அபரிமிதமாக அதிகரித்துள்ளதால் அதன் விலையும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
எப்போதும் ராயபுரத்தில் தான் போட்டியிடுவேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்


