கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து, எதிர் திசையில் வந்த அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது மோதியதே இந்த விபத்துக்குக் காரணம். விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில், அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை தாண்டி மறுபுறச் சாலையில் பாய்ந்தது. அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு கார்கள் மீது பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த 13 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக, மதுரை ஒத்தகடைப் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.
டெல்லியில் கிறிஸ்துமஸ் தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை – பிரதமர் பங்கேற்பு


