சாலையில் தங்கி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்கி தொழிலதிபா் என்று கூறி நம்பும் நபர்களை எல்லாம் ஏமாற்றி ஜாலியாக பெண்களுடன் வலம் வந்த ஏ.ஐ தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரிஸ்வான்(26) எனும் இளைஞர் பல்சர் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதாக கூறிய நபரை நம்பி 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தையும் ஒப்படைகாமல் போன நபரை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தபோது ரிஸ்வானின் செல்போனையும் பறித்து சென்ற நிலையில் இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ரிஸ்வான் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரித்தபோது சென்னை நங்க நல்லூரை சேர்ந்த சசிக்குமார்(35) என்பவர் பிடிப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு அரியலூரில் போலீஸ் என கூறி லார்ஜில் தங்கி வாக்கி டாக்கியுடன் பிடிபட்டு சிறைக்கு சென்றவர் என்பதும், 2013 ஆம் ஆண்டு ஏற்கனவே திருமணமான நிலையில் இவரின் செயல் பிடிக்காமல் அப்பெண் பிரிந்து சென்றுள்ளார், தற்போது தாம்பரம் சுற்றுவட்டத்தில் சுற்றித்திரியும் இவர் கண்ணில் கண்டவர்கள், பேச்சு கொடுத்தவர்களை தொடர்பு கொண்டு ஏமாற்றியுள்ளர். சாலையில் கிடைக்கும் இடத்தில் தங்கி பி.ஜி.ஆஸ்டல் போல இடத்தில் குளிக்க சிறிது ஓய்வு எடுக்க மட்டும் பணம் கொடுத்து டிப்டாப்பாக கிளம்புவார், கண்ணில் பட்ட நபர்களிடம் அன்பாக பேசினார் தொடர்ந்து பேசுவார். அதுபோல் தாம்பரத்தில் கரும்பு ஜீஸ் கடை நடத்திய தம்பதியிடம் 60 ஆயிரம், தான் ஒரு தொழிலதிபர் என்றும் ரயில்வே அதிகாரி என்றும் ஏ.ஐ மூலம் போட்டோ தயாரித்து பழகும் நபர்களுக்கு அனுப்புவார்.
அதுபோல் பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் பெற்ற நிலையில் அவரை ஏமாற்றி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றரை லட்சம் செலவில் பல்சர் இருசக்கர வாகனம், இரண்டு செல்போன் வாங்கிய சசிக்குமார் தற்போது ரம்யா எனும் பெண்ணை காதலித்த நிலையில் அவரிடம் சுற்றித்திரிந்துள்ளார், இந்த பல்சர் வாகனத்தை பார்க்கிங் பகுதியில் பார்த்த ரிஸ்வானிடம் பேச்சு கொடுத்து ஏமாற்றி பணம், செல்போன் பறித்த வழக்கில் மட்டும் சிக்கிய சசிக்குமாரை வழக்கு பதிவு செய்து தாம்பரம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளித்தால் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து தொடர் விசாரணை நடத்தப்படும் என தாம்பரம் போலீசார் தெரிவித்தனர்.
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு – அமைச்சர் பி.மூர்த்தி


