டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கபதற்காக நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.
தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது பொங்கல் பண்டிகையாகும். அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படும்.
இந்நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளத்துறை, கால்நடை, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சா் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவைத் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகிறார். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க மோடி, அமித் ஷா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமருடன் இணைந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக நயினாா் நாகேந்திரன் டெல்லி செல்கிறாா்.
வீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுருத்தல்…


