spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்…

வீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்…

-

- Advertisement -

திமுக அரசால் அராஜகப் போக்குடன் வீட்டுச் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என எடிப்பாடி பழனிசாமி  வலியுறுத்தியுள்ளாா்.வீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுருத்தல்…

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,  இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து House Arrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.

we-r-hiring

சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக, ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

அமித் ஷா வைத்த 2 அதிரடி டிமாண்ட்! விஜயின் அரசியல் வாழ்வு காலி? ராஜகம்பீரன் நேர்காணல்!

MUST READ