spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகீழடி முடிவுகளை ஏற்க மறுப்பது ஏன்? – ஜோதிமணி கேள்வி

கீழடி முடிவுகளை ஏற்க மறுப்பது ஏன்? – ஜோதிமணி கேள்வி

-

- Advertisement -

கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணம் என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.கீழடி முடிவுகளை ஏற்க மறுப்பது ஏன்? – ஜோதிமணி கேள்விதமிழ்ச் சமூகம் உலகிலேயே பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்ததற்கு நன்றி தெரிவித்த ஜோதிமணி, அதே கருத்தைத்தான் தாங்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம் என்றும் கூறினார். தமிழ்ச் சமூகம் உலகிலேயே பழமையானது என்பதை நிரூபிக்கும் முக்கிய ஆதாரமாக கீழடி அகழாய்வு முடிவுகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கீழடி அகழாய்வில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தமிழர்களின் தொன்மையான நாகரிகம், எழுத்து மரபு மற்றும் வாழ்வியல் முறைகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக ஜோதிமணி தெரிவித்தார். இவ்வாறான அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளாா்.

we-r-hiring

கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், அது தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசாக அமைய வேண்டும் என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இவிஎம் இயந்திரங்களில் முதல்கட்ட சரிபார்ப்பு நிறைவு

MUST READ