spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபூச்சாண்டி காட்டுகிறதா காங்கிரஸ்? திருப்பி கொடுக்க தயாராகும் திமுக! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

பூச்சாண்டி காட்டுகிறதா காங்கிரஸ்? திருப்பி கொடுக்க தயாராகும் திமுக! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

-

- Advertisement -

உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்கள், மாநில கட்சிகளிடம் சென்றுவிட்டனர். அங்கு காங்கிரசுக்கு இருக்கும் பலத்தை போன்று தான் தமிழ்நாட்டிலும் இருக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ஆட்சியில் பங்கு வேண்டும் எனறு காங்கிரஸ் எம்.பிக்கள், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் தொடர்ச்சியாக பேசி வந்தனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பேசியுள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூட்டணி ஆட்சி தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கட்சியினரை வலியுறுத்தியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் சொல்லியுள்ளார். காங்கிரஸ் மேலிடம் திமுக தான் தங்களுக்கு நிரந்தர கூட்டணி கட்சி. அதனால் திமுக குறித்து பேசாதீர்கள் என்று சொன்னதாக தோன்றவில்லை. இம்முறை தங்களுக்கு 25 இடங்கள் கூட கிடைக்காது என்று காங்கிரசுக்கு உள்ளூர பயம் உள்ளது. அதனால் 40 கேட்டால் 25 இடங்களாவது தக்க வைக்கப்படலாம் என்று அவர்கள் நினைக்கலாம். மற்றொன்று விஜயுடன் சென்றால் லாபம் கிடைக்கும் என்றால் அதையும் முயற்சிப்பார்கள். அவர்களில் சிலர் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க முடியுமா? என்று நினைக்கிறார்கள். சிலர் விஜயின் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள்.

ஆட்சியில் பங்கு தொடர்பாக காங்கிஸ் எம்.எல்.ஏ-க்கள் யாரும் பேசாமல் இருப்பதற்கு காரணம், அவர்களுக்கு கள நிலவரம் தெரியும். காங்கிரசுக்கு கட்சி கட்டமைப்பே கிடையாது. திமுகவினர்தான் அவர்களுக்கு தேர்தல் வேலை பார்க்க வேண்டும் என்பது எம்எல்ஏ-க்களுக்கு தெரியும். தேர்தல் நாளன்று வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச்செல்வது என்பது முக்கியமான விஷயமாகும். விஜய் கட்சியினருக்கு அப்படியான அரசியல் முதிர்ச்சி இல்லை. அப்போது சிட்டிங் எம்எல்ஏக்கள் திமுகவை எதிர்த்து பேசினால், தங்களை போட்டியிட சீட் தர மாட்டார்கள் என்றும் நினைக்கலாம். அதேநேரம், காங்கிரஸ் எம்.பி-க்களுக்கு இன்னும் பதவிக்காலம் உள்ளதால், அவர்கள் இப்படி பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதை காங்கிரஸ் மேலிடமும் ஊக்குவிப்பதாகவே நினைக்கிறேன். இல்லா விட்டால் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு ராகுல்காந்தி தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது என்று பேசி இருக்க மாட்டார். இது கூட்டணிக்குள் நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும். இன்றைக்கு அதை சரிகட்டும் விதமாக யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என சொல்லியுள்ளனர்.

இன்றைக்கு தமிழ்நாட்டு நிலவரப்படி திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தனித்து தான் ஆட்சி அமைக்க வேண்டும். மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் திமுக தேவையானவற்றை செய்து கொண்டு இருக்கிறது. இனியும் செய்வார்கள். அதேவேளையில், சாம்சங் விவகாரத்தில் திமுகவின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இது அவசியம் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருவேளை அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையம் பட்சத்தில் என்ன நடக்கும்? என்பது மக்களுக்கே தெரியும். எனவே தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி என்பதே வேண்டாம். அதனால் கூச்சல்களும், குழப்பங்களும் தான் வரும். கூட்டணிகளுக்குள்ளே பல பிளவுகள் வரும். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது ஆகும். இதை காங்கிரஸ் கட்சியினர் தெரிந்துகொண்டால் நல்லது.

காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கடந்த 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக உடன் குதிரை சவாரி தான் செய்திருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை எத்தனை போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரசுக்கு தொண்டர் படை எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் நேரு குடும்பத்தினர் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை காங்கிரசுக்கு ஆதரவாக இருக்க வைக்கிறது. மற்றபடி அவர்களுக்கு தொண்டர் படையோ, வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கிற கட்டமைப்புகளோ அவர்களிடம் கிடையாது. ஒரு காலத்தில் காங்கிரசின் வாக்கு வங்கியாக பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் உயர் சாதியினர் இருந்தனர். உ.பி., பிகாரில் முலாயம் சிங், லாலு பிரசாத் ஆகியோர் ஓபிசி பிரிவினரையும், சிறுபான்மையினரையும் பிரித்தனர். அதேபோல், மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் காங்கிரசிடம் இருந்து தலித் மக்களை பிரித்தனர். அதுவரை காங்கிரசை ஆதரித்து வந்த உயர் சாதியினர், 2014க்கு பிறகு முழுமையாக பாஜக பக்கம் போய்விட்டார்கள். தற்போது உ.பி., பிகாரில் காங்கிரஸ்க்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடையாது. அதே நிலை தான் தமிழ்நாட்டிலும் உள்ளது. எனவே காங்கிரஸ் வெளியேறுவதால் திமுகவுக்கு சிறுபான்மை மக்கள் வாக்குகள் கிடைக்காமல் போய்விடாது.

கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், அது விஜய்க்கு தான் லாபமாகும். அவர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. திமுக தரப்பில் காங்கிரஸ் வெளியேறினால் 25 இடங்கள் லாபம். ஜான் பாண்டியன், பிரேமலதா, ராமதாஸ் போன்றவர்கள் வருகிறபோது அவர்களுக்கு இடங்கள் கொடுக்க முடியும். மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பிரிந்து செனற்போதும் இருவரிடமும் தொண்டர் படை உள்ளது. அதேநேரம் காங்கிரசிடம் தொண்டர் படை எங்கே உள்ளது? விஜய் ஒரு பலம் நிரூபிக்காத நபர். இன்றைக்கு அவருக்கு 15 சதவீதம் வாக்குகள் வரும் என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று பின்னர்தான் தெரியும். காங்கிரஸ் கட்சியினர், தேர்தலில் திமுகவினர் வேலை செய்து ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என்று சுகம் கண்டுவிட்டனர். அவர்களுக்கு 5 சதவீதம் வாக்குகள் இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் இடத்தை சரிசெய்ய மற்ற கட்சிகளை உள்ளே கொண்டு வரலாம். ஸ்டாலின் கண்ணியமானவர் என்பதால் அவர் பலவீனமானவர் அல்ல. அவருக்கு தன்னுடைய பலத்த காட்ட தெரியாதா?  சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது. இன்றைக்கு காங்கிரசில் சில பேர் அதை செய்கிறார்கள். அது காங்கிரசுக்கு பலன் கொடுக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ