புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
உலகப் புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கற்பககிரகத்தில் வழிபட சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு முக்கியதஸ்தர்கள் , அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வரும் நிலையில் கர்ப்ப கிரகத்திற்குள் விஐபி-களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்த நடைமுறையை மாற்றி அனைவருக்கும் கர்ப்பகிரகத்திற்குள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு அனைத்து மக்களும் ஒரே வகையில் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக கூறி தர்பன் அவஸ்தி என்பவர் மத்திய பிரதேச உயர்நிலை மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அந்த மனுவை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் கர்ப்பகிரகத்திற்குள் யாரை அனுமதிக்க வேண்டும்? யாரை அனுமதிக்க கூடாது? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலை அல்ல என்றும், முதலில் அரசியல் சாசனத்தின் பிரிவு 14-ன் படி தன்னை அனுமதிக்க வேண்டும் என்பார்கள், பின்னர் அரசியல் சாசனத்தின் பிரிவு 19-ன் படி தனக்கு பேச்சுரிமையுள்ளது எனக் கூறி மந்திரங்கள் ஓத அனுமதிக்க வேண்டும் என சொல்வார்கள்.
இது எல்லாம் கோவில் நிர்வாகம் சார்ந்த விவகாரம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…


