spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமீண்டும் அமித்ஷா தமிழகம் வருகை! என்டிஏவில் தேமுதிக? ராஜ கம்பீரன் நேர்காணல்!

மீண்டும் அமித்ஷா தமிழகம் வருகை! என்டிஏவில் தேமுதிக? ராஜ கம்பீரன் நேர்காணல்!

-

- Advertisement -

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு அவர்களை பாஜக முதன்மைப்படுத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாஜகவில் கேசவ விநாயகம் நீக்கம் மற்றும் பி.எல். சந்தோஷ் விமர்சனம் உள்ளிட்டவை குறித்து அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- பாஜகவின் அமைப்பு செயலாளராக 15 ஆண்டுகளாக  இருந்து வந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்டிருக்கிறார். அண்ணாமலைக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் வாய் சவடால்தான் அதிகம் உள்ளது. செயல்பாட்டில் ஒன்றும் இல்லை என்று பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுகவை எதிர்கொள்ள என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது சுய விமர்சனம் செய்வது போல இருந்தாலும், உட்கட்சி பூசல்கள் இருப்பதைதான் காட்டுகிறது. இல்லாவிட்டால் கேசவ விநாயகம் தூக்கப்பட்டிருப்பார்.

கேசவ விநாயகம் மீது பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. அதை இத்தனை நாட்களாக மறைத்து வந்த நிலையில், தலைக்கு மீறி சென்றதால் வேறு வழியில்லாமல் தூக்கினார்கள். தமிழ்நாட்டில் சோசியல் இன்ஜினியரிங் செய்வதற்காக கொங்கு மண்டலத்தில் இருந்து அண்ணாமலையை கொண்டு வந்தனர். அவர் தேர்தல் அரசியலில் வெற்றி பெறாததால் வெற்றி பெறும் குதிரை என்று முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனை கொண்டு வந்தனர். ஆனால் தமிழக மக்கள் தலைவர்களுக்கு சாதி பார்க்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

பாஜக, அதிமுகவை முதன்மை படுத்தாமல் என்டிஏ கூட்டணி என்று சொல்வதன் மூலமாக பெரிய பின்னடைவை நோக்கி செல்கிறார்கள். பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், பிரச்சாரத்தின்போது என்டிஏ கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்ணடும்ம அறிவுறுத்தியுள்ளார்.ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டபோது, சொந்த கட்சியினரே பாஜகவின் புகைப்படத்தை மூடி வைத்தனர். அதற்கு காரணம் வடஇந்திய தலைவர்களை காண்பித்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. இது பாஜகவினருக்கு புரியவில்லை. பி.எல்.சந்தோஷ், தங்களுக்கு இவ்வளவு இடம் கிடைக்கப் போகிறது என்று சொன்னால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை இழந்துவிடுவார்கள்.

அதிமுக உடன் பயணித்துக் கொண்டே அவர்களை வெற்றி பெற விடாமல் செய்வதற்கான வன்மத்தை காட்டுகிறார்கள். இந்த போக்கு சரியானது அல்ல. எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளின் வலிமையை புரிந்துகொண்டு அவர்களை முதன்மை சக்தியாக நடந்துகொண்டால் தான், அது தேர்தல் ஆதாயத்திற்கானதாக மாறும். தங்களை முதன்மைபடுத்திக் கொண்டால் அது எங்கே போய் முடியும் என்பதற்கு கடந்த கால சாட்சியங்கள் உள்ளது.

பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜகவினர் கட்சியின் கொள்கைகளை முன்னிலைப் படுத்தவில்லை. தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளார். பாஜகவின் சித்தாந்தங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. தமிழ்நாட்டில் தனிநபர்களை முன்னிலைப்படுத்தி தான் கட்சி நடத்த முடியும். அண்ணாமலையை முன்னிலைப்படுத்தவும் தான் 10 சதவீதத்திற்கு மேலாக சென்றது. அண்ணாமலை உருவாக்கிய தாக்கத்தை, நயினார் நாகேந்திரனால் உருவாக்க முடியவில்லை.

ஆர்எஸ்எஸ் கொள்கைகளோ, சித்தாந்தங்களோ தமிழ்நாட்டில் எடுபடாது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினரை அமித்ஷா மிரட்டுவார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கிருஷ்ணசாமி தன்னுடைய தயவு இல்லாமல் ராமநாதபுரத்தில் ஒருவராலும் வெல்ல முடியாது என்கிறார். என்டிஏ கூட்டணிக்குள் இடம்பெற்றிருந்த அவர் யாருக்கு மிரட்டல் விடுக்கிறார்? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை விஜயை எல்லோரும் ஊறுகாய் போன்று தொட்டுக்கொள்கிறார்கள். டிடிவி தினகரன் எதற்காக என்டிஏவில் போய் சேர்ந்துள்ளார். டெல்லி அச்சுறுத்தினாலும் போக விரும்பினால், விஜயிடம் போய் விடுவார்கள். எல்லோரும் விஜயை காண்பிப்பார்கள். ஆனால் களத்தில் யாரும் அவரிடம் போக மாட்டார்கள். எனவே கிருஷ்ணசாமி மிரட்டப் பார்க்கிறார். தேமுதிக தனக்கு ராஜ்யசபா தராமல் எடப்பாடி ஏமாற்றிவிட்டார் என்று சொல்லிக்கொண்டு கூட்டணி அறிவிக்காமல் உள்ளார். தேர்தல் தேதியை கூட தேர்தல் ஆணையம் அறிவித்து விடும் போல, இவர் கூட்டணியை அறிவிக்காமல் உள்ளார். ஆனால் தேமுதிகவின் வலிமை என்பது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை.

தேமுதிகவின் உச்ச அரசியல் என்பது அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தது தான். அவர்களிடம் தற்போது 0.5 சதவீதம் வாக்குகள் தான் உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலை தேமுதிக சரியாக கையாளவில்லை என்றால் கட்சி காணாமல் போய்விடும். ரொம்ப கவனமாக கையாள வேண்டும். அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு திமுக கூட்டணியில் தான் உள்ளது. என்டிஏவுக்கு போனால் பணம் தருவார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ